Posts

Showing posts with the label அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்... திருக்குறள் விளக்கம்

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்....

Image
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்.... " அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை"                  குறள். : 814 அமர் - போர் அகத்து - இடையில் ஆற்றறுக்கும்- வலிமையைக் கெடுத்துக்கொண்டு ஓடும் கல்லா - பயிற்சி பெறாத, அறிவில்லாத மா - குதிரை அன்னார் - ஒப்பாவரோடு தமரின்-தம்மவர் என்று சேர்ந்திருப்பதைவிட தனிமை - தனிமையாக இருத்தல் தலை- நன்று , சிறப்பு போர் செய்துகொண்டிருக்கும்போது  கீழே தள்ளி விட்டுவிட்டு ஓடும் அறிவற்ற குதிரை போன்றவரோடு நட்பு கொண்டிருப்பதைவிட நட்பே இல்லாமல் தனிமையில் இருப்பது நலம் தரும். விளக்கம்: நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் காலத்தில் எந்தவித இடையூறும் செய்யாது மேலே ஏற்றிக்கொண்டு செல்கிறது ஒரு குதிரை. அதே குதிரையைப் போர்க்களத்தில்கொண்டு விடப்படுகிறது. போர்ச்சூழலைப் பார்த்ததும் குதிரை மிரண்டு போகிறது. போர் கலக்கத்தை ஏற்படுத்திவிட முதுகில் இருந்த வீரனை கீழே தள்ளி விட்டுவிட்டு ஓட்டம்  பிடிக்கிறது குதிரை. பயிற்சியின்மையாக இருக்கலாம். அல்லது அறிவில்லாததாகக்கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் குதிரை...