Posts

Showing posts with the label யானையோடு ஒரு விளையாட்டு -

யானையோடு ஒரு விளையாட்டு

Image
யானையோடு ஒரு விளையாட்டு  பாணன் ஒருவன் இன்று  ஒரு வள்ளலைப் பாடி பொருள் பெற்று வருகிறேன் என்று தன் மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றான்.  ஆனால் வரும்போது வெறும் கையோடு வருகிறான். வெறுங்கையை வீசிக்கொண்டு வீட்டிற்கு வந்ததும் பாணினிக்குக் கோபம். "இன்றும் வெறுங்கை தானா?" நக்கலாகக் கேட்டாள். "இல்லை ...இல்லை கொண்டு வந்திருக்கிறேன்" என்றான். "என்ன கொண்டு வந்தீர்கள்? காட்டுங்கள்." ஆர்வமாக  கேட்டாள். தன் மனைவியோடு சொல் விளையாட்டு  விளையாடிப் பார்ப்பதற்கான நல்வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. நழுவ விட்டுவிடுவானா? ஒரு நமட்டுச் சிரிப்போடு பாணினியைப் பார்த்தான். அவள் கண்கள் அவன் கையில் ஏதாவது இருக்கிறதா என்று துளாவின. அவளுடைய ஆர்வத்தைக் கண்டு பாணனுக்கு உள்ளுக்குள்  ஒரு சிரிப்பு. "வம்பதாம் களபம்   கொண்டு வந்திருக்கிறேன்" என்றான். (அதாவது கயிறு அணிந்த யானை என்பது அதன் பொருள்.) அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? "வாசனை உடைய சந்தனத்தைத்தான் பெற்று வந்தாயா? நல்லது.... அப்படியானால் அதை நீயே பூசிக்கொள் "என்று கோபமாக சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண...