Posts

Showing posts with the label நிறைகுடம் நீர் தளும்பல் இல் -பழமொழி விளக்கம்

நிறைகுடம் நீர் தளும்பல் இல்

நிறைகுடம் நீர் தளும்பல் இல்  பழமொழிகள் படித்தவர்க்கும் பாமரர்க்கும் வழிகாட்டவல்ல சான்றோர் பெருமக்களின் அனுபவமொழிகள். உலக நடைமுறையை உள்ளதை உள்ளபடி உணர்ன்ற உண்மையை நம் முன் வைத்து கவனமாக நடை பயிலுங்கள் என்று அறிவுரை தந்து நிற்பவை. வாழ்க்கைத் தத்துவங்களை  ஒற்றை வரியில் உணர்த்திச் செல்பவை. ஒவ்வொரு பழமொழியும் ஒரு அருமையான வாழ்வியல் உண்மையைக் காட்சிப்படுத்தி கடந்து போகும். "பழமொழியில் உமி கிடையாது "என்பார்கள். எந்தப் பழமொழியும் பயனற்ற வெற்றுச் சொற்களால் புனையப்பட்டது அல்ல. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவாகவே இருக்கும். "நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப " என்று முதுமொழிக்கு இலக்கணம் சொல்கிறது  தொல்காப்பியம். முதுமொழி கூர்மையும் நுட்பமான உலக நடைமுறை உண்மையும் கொண்டதாக  இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பு முதுமொழிக்கு உண்டு. குறித்த பொருள் ஒன்றனையே வரையறுத்து  உரைக்கும் தன்மை முதுமொழியின் சிறப்பு. எப்போதுமே அறிவுடையவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அமைதியாக...