உழைப்பாளர் தினம்
உழைப்பாளர் தினம் " பத்து விரல்களும் பதறாது உழைத்தால் அஞ்சு விரலால் அஞ்சாது உண்ணலாம்" "என்பார்கள். ஆனால் உண்மையில் இதுதான் நிலைமையா?நாள் முழுவதும் கூன் ஒடிய உழைத்தாலும் கூலி என்னவோ அரை வயிற்றுக் கஞ்சிக்குத்தான். இதுதான் உழைப்பாளிகளின் நிலைமை. இப்படி உழைப்பாளி வர்க்கம் நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு விடிவுகாலம் வருவது எப்போது? அப்படியொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்ததின் விளைவு அவர்களுக்கான ஓர் நாள் தோன்ற காரணமாக இருந்தது. உழைத்து உழைத்து நைந்துபோன கைகளையும் ஆரம் சூட்டி அழகு பார்க்கும் நாள்தான் இந்த உழைப்பாளர் தினமான மே தினம். இதன் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போமானால் உழைப்பாளர்கள் நாள் கொண்டாட்டத்தின் உண்மை காரணம் புரியும்.பல நாடுகளில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை கட்டாயமாக வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். குறிப்பிட்ட நேர அளவு நிர்ணயிக்கப்படாமல் அவர்கள் உழைப்பு சுரண்டப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாள் முழுவதும் வேலை . ஆனால...