Posts

Showing posts from August, 2025

ஓணான் பனைமரம் ஏறுமா

ஓணான் பனைமரம் ஏறுமா ஏறாதா ஓணான் பனைமரம் ஏறுமா... ஏறாதா? ஏன் ஏறாது.....பனைமரம்  சொரசொரப்பானதாக இருக்கும் என்பதால்  பனைமரத்தில் ஓணான் ஏறாது என்கிறீர்களா? பனை மரத்தில் ஓணான் ஏறியதைப் நானும் பார்த்ததில்லை. ஆனால் பனை மரத்தில் ஓணான் ஏறும் என்பதை நான்  அடித்துச் சொல்லுவேன்.. ஆதாரத்தோடு சொல்லுவேன். ஓணான் பனைமரம் ஏறும்...ஏறும்...ஏறும்.  கணக்கதிகாரத்தில் ஒரு ஓணான் கணக்கு இருக்கிறது. அதில் ஓணான் பனை மரத்தில் ஏறிய கணக்கு ஒன்று இருந்தது. பாடல் இதோ உங்களுக்காக.... " முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத் தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன் சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே நாணா தொருநாள் நகர்ந்து " என்று காரி நாயனார் கணக்கதிகாரம் என்ற நூலில் சொல்லியிருக்கிறார். இப்போதாவது ஓணான் பனைமரம் ஏறும் என்பதை நம்புகிறீர்களல்லவா? இப்போது கணக்குக்கு வாருங்கள். ஒரு முழம் என்றால் இரண்டு சாண். ஒரு சாண் என்றால் பன்னிரண்டு விரல் கடையளவு அப்படியானால் இரண்டு முழம் என்றால் இருபத்தினான்கு விரல்கடையளவு  என்பதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . பனைமரத்தினுடைய உயரம் 32 முழம். ஓணான் ஒரு ந...

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று படித்திருக்கிறோம். அதனால்தான் வேளாண்மை உயிர்நாடி என்கிறோம். விவசாயி வேளாண் தொழில் செய்யாவிட்டால்...எந்தத் தொழில் வளர்ச்சியடைந்தும் பயனில்லை. ஒரு வயிற்றுச் சாப்பாட்டுக்குத்தான் இத்தனை ஓட்டமும் ...ஓயா உழைப்பும்.. தூங்கா விழிகளும்... ஓய்வறியா உடம்பும்....ஓட்டமும் நடையும். ஆனால் வயிற்றுக்குச் சாப்பாடு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா?   அதனால் திருப்திபட்டுக்கொள்கிறோமா  என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஒன்று கிடைத்தால் இன்னொன்றின்மீது நாட்டம். அதுவும் கிடைத்துவிட்டால்.... இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளலாமோ என்று ஆசை வந்து பிடறியைப் பிடித்து முன்னே தள்ள உட்கார நேரமில்லாமல் சாப்பிட நேரம் எடுத்துக் கொள்ளாமல் பணத்தின் பின்னால்  பதவியின் பின்னால் பேரும் புகழும் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரு போதையில்  வெறி கொண்டு ஓடத்தொடங்கிவிடுவோம். இப்படியாக நமது ஓட்டம் ஒருநாளும் நின்றபாடில்லை. சரி.எல்லாம் கிடைத்துவிட்டது. இனி நிம்மதியாக வாழலாம் என்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரத்தில் வந்...

அணிலாடு முன்றில்

அணிலாடு முன்றில் தலைவி ஒருத்தி உணவு உண்ண மறுக்கிறாள். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு  படுங்கினாள். திடீரென்று படுக்கையிலிருந்து எழும்பி எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கேட்ட கேள்விக்குத் தொடர்பில்லாமல் பதில் சொல்கிறாள். என்ன இது? என்னாயிற்று இந்தத் தலைவிக்கு? விசாரிக்கிறாள் தோழி. "ஒன்றுமில்லை  "சமாளிக்கிறாள் தலைவி. "இல்லை .உன் உடலில் சில மாற்றங்கள் தெரிகின்றது. செயலில் தடுமாற்றம் இருக்கிறது. எப்போதும் எதையோ பனி கொடுத்த  நிலையில் இருப்பது போல  தெரிகிறது.  எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல். என்னிடம் சொல்வதற்கு உனக்கென்ன தயக்கம்?" "தயக்கம் ஏதுமில்லை" "அப்புறம் என்ன .. மறைக்காமல் உண்மையைச் சொல்.  ஏதாவது பிரச்சினையா? அல்லது காதல் கீதல் என்று ஏதாவது..." "ம்... நிறுத்து. அப்படியொன்றும் இல்லை' "அப்படி ஒன்றும் இல்லை என்றால் வேறு எப்படி என்பதை என்னிடம் சொல்." "அது ...அது வந்து...அதை நான் எப்படி சொல்லுவேன் " "அடிப்பாவி உண்மையாகவே காதலில் விழுந்துவிட்டாயா?" "ஏன் உனக்குக் தெரியாததா என்ன" "அதனா...

துறந்தாரும் துறக்க மறக்கும் அம்மா

துறந்தாரும் துறக்க மறக்கும் அம்மா  அம்மா இந்த மூன்றெழுத்து  சொல்லைத் துறந்தவர் யாரும் உண்டோ? அது சொல் அல்ல . அது ஓர் உணர்வு. உயிர். உயிரைக் துறந்து உயிர் வாழக் கூடுமோ? உணர்வில்லாத மனிதன் மனிதனாக வாழத்தான் முடியுமோ? ஆசாபாசங்களைத் துறத்தேன். ஆடம்பரத்தைத் துறந்தேன் என்று சொல்லலாம். ஆனால் தாயைத்   துறந்தேன்  என்று எவரும் சொன்னதில்லை. சொல்லப் போவதுமில்லை. இதற்கு பட்டினத்தாரே சாட்சி. உலக வாழ்க்கையைத் துறந்து நாடோடிகளாக அலைந்து திரிந்த பட்டினத்தார் தனது தாய் இறந்ததும்  ஓடோடி வந்து, கண்ணீர் விட்டு அழுது எழுதிய பத்துப் பாடல்கள் நம்மையும் கண்ணீர் சிந்த வைக்கின்றன. இந்தப் பாடல்கள் சித்தராக இருந்தாலும்    தாயின் இழப்பு  ஒரு மனிதனை எந்த அளவுக்குப் புரட்டிப் போட்டுவிடும் என்பதற்கான அத்தாட்சி. தாய் இறந்து விட்டார் அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அடுக்கி வைக்கின்றனர். அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி உடலுக்குத் தீமூட்டி தம் தாய்க்குரிய இறுதிச் சடங்கை நிறைவேற்றினார்  பட்டினத்...

எத்தனை குருவிகள்

எத்தனை குருவிகள்  சோழ நாட்டிலுள்ள ஓர் அழகிய ஊர் பூம்பொழில். அங்கு பொன்னுசாமி என்ற ஏழை  விவசாயி வாழ்ந்து வந்தார். அவர் தன் வயலில் விளைந்த ஒரு கலம் நெல்லை  காய வைத்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வேலை செய்த அலுப்பு. சற்று கண் அயரலாம் என்று ஓய்வெடுத்தார். மணி மூன்று ஆகிவிட்டது. எழும்பி முகம் கழுவிவிட்டு நேரே வயலக்குப் போனார். அங்கு நெல் ஒன்று மில்லை. அதிர்ந்து போனார். சுற்றும்முற்றும் பார்க்கிறார். ஒரு குருவியின் வாயில் நெல் மணிகளைக் கண்டார். ஆத்திரத்தில் அருகில் கிடந்த மண்ணாங்கட்டியை எடுத்து குருவி மீது வீசினார். மண்ணாங்கட்டி பட்டு குருவி கீழே விழுந்தது. அருகில் சென்று பார்த்தால் குருவி இறந்து போனது. இப்போது விவசாயிக்கு  ஓர் அற்ப ஆசை. நான் ஒரு கலம் நெல் காய் வைத்தேன். அவ்வளவு நெல்லையும் தின்ன குருவிகள் எங்கிருந்து வந்தன? அப்படி எத்தனை குருவிகள் தான் வந்திருக்கும்? இந்தக் குருவி எத்தனை நெல் மணிகள் தின்றிருக்கிறது என்பது இந்தக் குருவியின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் தெரிந்துவிடும் என்று வயிற்றைக் கிழித்துப் பார்த்தார். குருவியின் வயிற்றுக்குள் மூன்று நெல் மணிகள் ...

தோட்டக்காரன்

தோட்டக்காரன்  கல்லூரி வாசலில் ஆட்டோவை நிறுத்தினார் டிரைவர். "என்ன தம்பி...இடம் வந்துட்டா "என்றார் செல்லையா. "ஆமாம் ...நீங்க சொன்ன கல்லூரி வந்தாச்சு. இறங்குங்க..." தலையை வெளியில் போட்டு எட்டிப்பார்த்த செல்லையா",தம்பி சரியா பாத்தியா... என் மவன் படிக்கிற காலேஜ் இதுதான" "உங்கள் மவன் படிக்கிற கல்லூரி இதுவா.... அது எப்படி எனக்கு தெரியும்? நீங்க சொன்ன காலேஜ் இதுதான்...இறங்குங்க' "கொஞ்சம் பொறு தம்பி.. ஒரு நிமிஷம் .. இந்தபுள்ளைகளிடம் கேட்டு வாரேன்." "நான் அடுத்த சவாரி போகாண்டாமா? பணத்தை தந்து என்னை கட்பண்ணுங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே பெரியவர் கொண்டு வந்த வாழைக்குலை யையும் குட்டிச் சாக்கு மூட்டையையும் எடுத்து கீழே வைத்தார் ஆட்டோ டிரைவர். "பொறு தம்பி...சாக்கை வேகமாக வைக்காத.. முறுக்கு  நொறுக்கிப் போயிடும்"என்றபடி படக்கென்று குட்டிச்சாக்கை வாங்கி தன் கால் பக்கத்தில்  மெதுவாக வைத்தார்.  இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையை எடுத்து பணத்தை எடுத்தார். "எவ்வளவு பணம் சொன்ன...." "இருநூறு..." "பத்து நிம...

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே தமிழகத்தில் வாழ்ந்த எத்தனையோ சித்தர்களுள் பட்டினத்தார்க்கு என்று தனிச்சிறப்பு  உண்டு.  பட்டினத்தார் என்றதும் வாழ்வின் நிலையாமை பற்றி நிறையப் பேசியவர். ஆசைகளை அறுக்கச் சொன்னவர். அதிலும் பெண்ணாசை பெருந்தீங்கென்றவர்  என்பதுதான் நினைவுக்கு வரும். கூடவே அவர் துறவியாகவே வாழ்ந்தவர். எளியவர் என்ற நினைப்பு நமக்குள் வந்துவிடும். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது யாரும் எதிர்பாராத  பல திருப்பங்களைக் கொண்டது. பட்டினத்தார் வசதி மிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையோடு சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டு  ஓடியாடிப் பெரும் பொருள் சேர்த்தவர். திருமணம் செய்து மகிழ்ச்சியாக  இல்லறம் நடத்தியவர். செல்வமும் மகிழ்ச்சியும்  ஒருபோதும் அவர் இல்லத்தில் குறைந்திருக்கவில்லை. ஆனால் இந்தத் தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. ஆண்டுகள் கடந்தன. ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்க  நினைத்தார். அவர் நினைத்தது போலவே இறைவன் திருவருளால் ஒரு பிராமணர் மூலம் ஓர் ஆண்குழந்தை கிடைத்தது. அக்குழந்தைக்கு மருதவாணன்...

எலுமிச்சம்பழங்கள் எத்தனை

எலுமிச்சம்பழங்கள் எத்தனை  பூம்பாறை என்று ஒரு அழகிய ஊர். அந்த ஊரில் ஒரு பணக்காரர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் தனது வேலையாள் ஒருவனைக் கூட்டிக்கொண்டு கால்வாய்க் கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் இருந்த தோட்டத்தில் நிறைய எலுமிச்சம்பழம் பழுத்துத் தொங்குவதைப் பார்த்தார். உடனே தன் வேலைக்காரனிடம் "போய் எனக்கு ஒரு எலுமிச்சம்பழம் பறித்து வா எ"ன்றார். "முடியாது சாமி "என்றான் வேலைக்காரன். "ஏன் முடியாது?" "இந்தத் தோட்டத்திற்கு ஐந்து வாயில்கள் உள்ளன. உள்ளே செல்ல வேண்டுமானால் ஐந்து காவலாளிகளையும் கடந்துதான்  செல்ல வேண்டும்." "எது எப்படியோ நீ எனக்கு ஒரு எலுமிச்சம்பழம் பறித்து வந்தே ஆக வேண்டும் "என்று  கட்டளையிட்டார் பண்ணையார். வேலைக்காரனும் வேறு வழி இல்லாது ஒப்புக் கொண்டான். நேரே முதல் வாயிலில் நின்ற வேலைக்காரனிடம் போய்  எலுமிச்சம் பழம் பறிக்க அனுமதி கேட்டான். வேலைக்காரன் பேராசைக்காரன். "நீ எத்தனை எலுமிச்சம் பழங்கள் வேண்டுமானாலும் பறித்துக்கொள். ஆனால் ஒரு நிபந்தனை "என்றான். "என்ன நிபந்தனை?" "நீ பறித்து வரும்...

கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்

கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்  அனைவருக்கும் கூற்றம், கூற்றுவன் என்றால்  ஒரு நடுக்கம். கலக்கம். அச்சம். அந்தச் சொல்லைச் சொல்லாமலேயே கடந்து போய்விட வேண்டும் என்று நினைப்பர். நாம் நினைத்த நேரத்தில் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் கூற்றுவன் என்ன நாம் வைத்த ஆளா? அது யாருப்பா? கூற்றுவன்? நீ கண்டியா...என்று யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். ஊ..ஹூம் என்று உதட்டைச் பிதுக்குவர். யாரும் தெரியாத ஒருவர்மேல் ஏன் இந்த அச்சம்? ஏனிந்த கலக்கம்? கூற்றமாவது ...கூற்றுவனாவது? இப்படியொரு இறுமாப்போடு நடந்தேன். "யார் சொன்னது யாருக்குமே கூற்றம்  தெரியாது என்று...? பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்பது போலல்லவா இருக்கிறது!" இப்படி  ஒரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். திருதிருவென்று விழித்தேன். அங்கே.......அதே புன்னகையாள்  என்னைப் பார்த்து மெல்ல நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். "நீங்கள் கூற்றுவனைப் பார்த்தீங்களா?' இந்தமுறை சற்று கடுமையாகவே கேட்டுவிட்டேன். "இதுதானே உனக்குக் கூற்றம்" என்றார். " "நான் என்ன கேட்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...?".முரட்டுத்தனமான  கேள...

பூக்கள் எத்தனை

பூக்கள் எத்தனை  எழிலன் முகிலன் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரு குளத்தோரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். ஒரு குளத்தில் நிறைய தாமரைப் பூக்கள் மலர்ந்து கிடந்தன.  ஆ...எத்துணை அழகான மலர்கள்.! "எழிலா! சற்று நேரம் இங்கு அமர்ந்து விட்டுச் செல்வோமா ?"என்றான் முகிலன். "எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்றான் எழிலன்.  இருவரும் குளத்தோரம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு குளத்தையும் அதில் அசைந்தாடும் மலர்களையும் மெல்லத் தொட்டு விளையாடும் தென்றலையும் நுகர்ந்தபடி அமர்ந்திருந்தனர். அப்போது எங்கிருந்தோ வண்டுகள் ரீங்காரமிட்டபடி பூக்களை நோக்கி வந்தன. பூக்களைப் பார்த்த வண்டுகளுக்குச் சும்மா இருக்க முடியவில்லை.  சுற்றிச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. எவ்வளவு நேரம்தான் சுற்றிக்  கொண்டிருப்பது? பூக்களில் அமர்ந்தால் தானே மது அருந்த முடியும் என்ற முடிவோடு திடீரென்று ஆளுக்கொரு பூவாக ஒவ்வொரு வண்டும் இடம் பிடித்துக்கொண்டது. இப்போது ஒரு  வண்டுக்கு மட்டும் அமர்வதற்கு பூ கிடைக்கவில்லை.  அந்த வண்டு பரிதாபமாகச் சுற்றிச் சுற்றி வந்தது. "ஐயோ பாவம்" என்றான் முகிலன். "ஒரு ...

எட்டாம் நம்பர் வீடு

எட்டாம் நம்பர் வீடு  "எட்டாம் நம்பர் வீட்டை எட்டிப்பார்காதே...எட்டிப்பார்க்காதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நீ கேட்க மாட்டியா..."காதைப்பிடித்துத் திருகினார் அம்மா. ஏன் போனால் என்னவாம்? "போகாதே என்றால் போனால் என்னவாம்? எதிர்தா பேசுற..... இனி ஒருவாட்டி எதிர்த்துப் பேசினா வாயிலேயே சூடு வச்சுடுவேன். " "போகல தாயி....எதுக்கு எட்டாம் நம்பர் என்றதும் இப்படி பயப்படுகிறாய்?" உனக்குச் சொல்லிட்டுத்தான்  மறுவேலை பார்க்கணும். எப்பப் பார்த்தாலும் ஏன்? எதற்கு? என்று ஆயிரெத்தெட்டுக் கேள்வி..."அம்மா முணுமுணுத்தபடியே  முகத்தில் முத்துமுத்தாக அனுப்பி இருந்த  வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டார். ஏன் எட்டாம் நம்பர் வீடு என்றதும் அம்மா இப்படிப் பயப்படுகிறார்? வியர்த்து வேறு கொட்டுகிறது. பேச்சில் ஒரு படபடப்பு தெரிகிறது. எட்டாம் நம்பர் வீட்டிற்கும் அம்மாவிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. அதை மறைக்கத்தான் அம்மா இத்தனை பாடுபடுகிறார். ஒரு பக்கம் அம்மாவைப் பார்த்தால்  பரிதாபமாக இருக்கிறது. யார் வீடு? இந்த வீட்டில் அப்படி என்ன மறைக்கப்பட வேண்டிய பொருள் இரு...

பூரணி

பூரணி எது வரைக்கும் இந்த நாடகம் ?  ஒன்றுமே  புரியவில்லை . இன்று முடிவுக்கு வரும் நாளை முடிவுக்கு வரும் என்று ஓரளவு நானும் சமாளித்துத்தான் பார்த்தான். ஆனால் முடிவதாகத் தெரியவில்லை. போதும் போதும் என்றாகி விட்டது. இதற்கு மேலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால்  .... இதற்கு என்னதான் வழி ?  வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லாமல் தவிப்பது போன்ற உணர்வு. அலுவலகத்தில் இருக்கும்வரை வீட்டு நினைப்பே வராது. வீட்டிற்குப் புறப்படும்போது கூடவே பரபரப்பும் தேவை இல்லாத கவலைகளும் வந்து தொற்றிக் கொள்ளும். தேவை இல்லாத கவலையா... நான்தான் அதிகப்படியாக அதைப் பற்றிய சிந்தனைகளை மனதில் போட்டுக் கொண்டு என்னையே வருத்திக் கொண்டிருக்கிறேனா ? எனக்குள்ளேயே எப்போதும் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தீர்வுதான் கிடைத்தபாடில்லை. இன்றும் அப்படித்தான் காலையில் அலுவலகம் புறப்படும் முன்னர் வெளியில் வந்து பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்தேன். எதிர் வீட்டு அண்ணி அலுவலகத்திற்குச்  செல்ல வீட்டைவிட்டு வெளியே   வந்தவர்கள் என்னைப் பார்த்ததும் "என்ன கொழுந்தனாரே இன்னும் புறப்படலியா? " என்று கேட்டுவி...

பாவமன்னிப்பு

    பாவமன்னிப்பு  ஞாயிறு என்றாலே போதும். செல்வ ரத்தினம் வீடு காலையிலிருந்தே ஒரு பரபரப்பிலேயே இருக்கும்.          ஆளாளுக்கு குளித்துவிட்டு கோவிலுக்குப் புறப்படும் முன்னே ஒரு களபரமே நடந்து முடிந்துவிடும்.      "அம்மா இன்னைக்கு என்ன டிரஸ் போடணும்...."      "அம்மா என் கம்மலைப் பார்த்தியளா...."      "அம்மா என் ஷு எல்லாம் துடைச்சு வச்சாச்சா..."      ஆளுக்கொரு மூலையிலிருந்து கத்தி தொலைத்து விடுவார்கள்.       இது இந்த வாரம் மட்டுமல்ல... வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஆனால் இதே கத்தல்தான்.      செல்வரத்தினம் மட்டும் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து      இன்று என்ன பாவஅறிக்கை செய்ய வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார்.            கண்கள் மூடிய நிலையில் மறுபடியும் மறுபடியும் அந்தக் காட்சி...