க்ளூ கொடுங்க ப்ளீஸ்
க்ளூ கொடுங்க ப்ளீஸ்.... "கரும்பைச் சுற்றி சுற்றி வந்து குறும்பு செய்வேன் நான்- நான் யார் தெரியுமா?" விடுகதைக்கு விடை சொல்லு பார்ப்போம். "அக்கா அக்கா .... ஒரு க்ளூ கொடுங்கக்கா....ப்ளீஸ் ஒரு க்ளு கொடுத்தால் உடனே கண்டு பிடிச்சுடுவேன்" " என்னால் க்ளூ எல்லாம் கொடுக்க முடியாது. தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லேன். இதற்குபோய் ஒரு க்ளூ கொடு...ஒன்பது க்ளூ கொடு என்று ....?" "கொஞ்சம் புரியும்படி இன்னும் ஒரே ஒரு க்ளூ கொடுத்தால் கொடுத்தால் சட்டென்று பதில் சொல்லிவிடுவேன்." "தெளிவாக சொல்லணும் என்றால் விடுகதைக்கான விடையை நேரடியாக நானே சொல்லி விடலாமே இந்த எளிய விடுகதைக்கு போய் க்ளூவா? க்ளூ கொடுங்கள் .. க்ளூ கொடுங்கள் என்று கேட்கிறியே.? க்ளூ என்றால் என்ன?என்று உனக்குத் தெரியுமா ?" "க்ளூ என்றால் க்ளூ தான்" "க்ளூ என்பதன் பொருள் என்ன? அதைச் சொல்லு" "க்ளூ என்றால் துப்பு கொடுத்தல் என்று பொருள். வேண்டுமென்றால் கூகுளில் தேடிப்பார்த்து நான் சொல்வது சரியா? தவறா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்." " இதை மட்டும் சரியாக ச...