நான் வேலைக்குப் போறேன்
நான் வேலைக்குப் போகிறேன் "எனக்கு வேலை கிடைத்திருக்கிறது... எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .." பங்கஜத்திற்கு தனது மகிழ்ச்சியை யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும்போல் இருந்தது. மெதுவாக கதவைத் திறந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள் பங்கஜம் ... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையுமே காணவில்லை. "சே...இன்றைக்குப் பார்த்து ஒரு சின்ன குழந்தைகூட தெருவில் இல்லை." சலித்துக் கொண்டபடி வீட்டுக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்தாள். நாலு நிமிடம்கூட தொடர்ந்து அமர்ந்திருக்க முடியவில்லை. மறுபடியும் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தாள். தொலைவில் ஒரு பெரியவர் தோளில் மண்வெட்டியோடு வந்துகொண்டிருந்தார். என் நேரம்....மண்வெட்டி தான் குறுக்கே வருது. என் கிரகம் இப்படியா இருக்கணும்.? பல்லை நறநறவென்று கடித்தபடி கதவில் கையால் குத்தினாள். ஐயோ...என் தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறதே.....மெதுவாக வீட்டிற்குப் பின்னால் இருக்கும் தொழுவத்தில் குச் சென்றாள். அங்கு தூணில் கட்டிப் போட்டிருந்த கன்றுக்குட்டி யின் முதுகை மெதுவாகத் தடவியபடி" அக்கா நாளையிலிருந்து எனக்க...