Posts

Showing posts with the label மூன்றாவது மொழி தேவையா -கட்டுரை

மூன்றாவதுமொழி தேவையா

மூன்றாவது மொழி தேவையா "புதியன புகுதலும் பழையன   கழிதலும் வழுவல"  இது காலத்தின் கட்டாயம் .  புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப  தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்கள்  நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதனால் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே வைத்துக் கொண்டு திட்டங்கள் கொண்டுவருவது நன்மை பயக்குமா என்றால் சற்று  ஐயம்தான் எழுகிறது. மொழிப்பாடம் படிப்பது வேறு. துறைசார் பாடங்கள் படிப்பது வேறு. துறைசார் பாடங்கள் படிப்பது காலத்தின் கட்டாயம். மொழிசார் பாடங்கள் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுபவையாக இருத்தல் வேண்டும். பன்மொழிப் புலமை பெறுவதில் தவறில்லை. அது நாமாக விருப்பப்பட்டுப் படிப்பதாக இருக்க வேண்டும். வலிந்து திணிக்கப்படும்போது ஒரு சலிப்பு ஏற்படும். அதுவும் சிறுவர்களாக இருக்கும்போது பாடச் சுமை ஏற்பட்டு படிப்பு என்றாலே ஒரு வெறுப்பு வந்துவிடும். கல்வி சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்கக் கூடாது  என்றுதான் எத்தனையோ திட்டங்களை  வகுத்துச் செயல்படுத்திக் கொண்டிர...