பீலேயாமும் கழுதையும்
பீலேயாமும் கழுதையும் நாடகம் காட்சி ஒன்று இடம் : பாலாக் மன்னனின் அரண்மனை உறுப்பினர்கள் :( பாலாக், அமைச்சர், தளபதி, வீரர்கள்) பாலாக்: : அமைச்சரே ! என்ன இது ... மாடுகள் மந்தை மந்தையாக மேய வருவதுபோல ஒரு கூட்டம் மக்கள் நம் தேசத்தை நோக்கி வருவதாக செய்தி வந்திருக்கிறதே , உண்மைதானா? அமைச்சர். : "ஆம் மன்னா...நானும் கேள்விப்பட்டேன். இஸ்ரவேலர் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் மக்கள் வந்ததாக கூறுகின்றனர். பாலாக் : " இஸ்ரவேலரா? அவர்களுக்கு நம் நாட்டிற்குள் என்ன வேலை....?உடனே துரத்தி அடியுங்கள். அமைச்சர் .: இதோ வீரர்களை அனுப்புகிறேன் மன்னா.. (அ...