Posts
Showing posts with the label பணி நிறைவுப் பாராட்டு மடல்-கவிதை
பணி நிறைவுப் பாராட்டு மடல்
- Get link
- X
- Other Apps
பணி நிறைவுப் பாராட்டு மடல் கற்றோர்நிறை நாகர்கோவிலில் பிறப்பதிகாரம் சான்றோர்நிறை செட்டிகுளத்தில் பெற்றார் குடியுரிமைஅதிகாரம் மணிராஜா இல்லத்தில் கிடைத்தது வாழ்வதிகாரம் -சித்ரா பிள்ளை இருவர் பெற்றதால் வந்தது தாயதிகாரம்! மாநகராட்சித் தமிழ்பள்ளி அளித்தது முதலதிகாரம் கரும்பலகையில் எழுத்தோடு நடத்தினார் எழுத்ததிகாரம் சொற்சுவைபட கற்பிப்பதில் கண்டோம் சொல்லதிகாரம் -சித்ரா உரையிடையிட்ட பேச்சில் மிளிருமே பொருளதிகாரம்! கட்டமைப்பு திறன் முற்றும் பெற்ற யாப்பதிகாரம் கலையாய்க் கற்பித்தலால் காணலாம் அணியதிகாரம் அறிவுப் பசிக்கு அமுதூட்டியதில் வெளிப்பட்டது பொறுப்புதிகாரம்-சித்ரா அறம்விளை மாணவர் மிகு விளைச்சலதிகாரம்! முத்தமிழும் கொஞ்சி விளையாடும் வகுப்பதிகாரம் செந்தமிழ்ச் சுவை சேர்க்க நாநடத்தும் நாவதிகாரம் தலைமுறையை காக்கும் காப்பதிகாரம் - சித்ரா கல்விப் பயிர் வளர்க்க வந்த நீரதிகாரம் ! தொய்வில்லா அறப்பணிக்கு தடையிட வந்தது ஓய்வதிகாரம் ஓயாது இல்லறப்பணி ஆற்றுக நல்லதிகாரம் பணி நிறைவுப் பாராட்டு விழா ஒரு நினைவதிகாரம் -சித்ரா நித்தம் எம்நெஞ்சில் குடியிருக்கும் சிறப்பதிகாரம்...