வேட்டியின் சாட்சி
வேட்டியின் சாட்சி காலைப்பொழுது கவின்மிகு அழகு கதிரவன் கண்டு கண்களைத் திறந்து கள்ளச்சிரிப்பு மெல்ல அரும்ப மேனி புடைத்து வெண்முத்தம் சிதற அள்ளி அணைத்து ஆரத்தழுவி ஆலையிலேற்றி ஆடையாக்கி ஆளுக்கொரு பெயர் சூட்டி அணி அணியாய் அனுப்பி வைத்தனர்! வெண்வேந்தன் எனக்கு வேட்டி என்னும் நற்பெயறேற்றி வேற்று வரிசையில் அமர்த்தி வைத்தனர் யார் யாரோ வந்தார் ஏதேதோ சொல்லி என்னை நிராகரித்தார். உழவன் ஒருவர் வந்தார் உவகையோடு கையிலெடுத்து தனதாக்கிக் கொண்டார் உழவன் மேனிக்கு அணியமாகும் பெரும்பேறு தந்து விட்டார் மனமகிழ் கொண்டேன் மகிழ்ந்தேன் வியந்தேன் உன்மத்தம் கொண்டேன் அதிகம் ஆடாதே என்று ஓரிரு மாதத்தில் கந்தல்என்ற பெயரில் கடைக்கோடியில் வீசிவிட்டார்! கசக்கிக் கிடந்தேன் கலங்கி குலுங்கி கண்ணீர் விட்டழுதேன் காலம் செய்த கோலமிது வேறெதுவும் தெரியவில்லை இதுதான் என்வாழ்வா? புலம்பெயர் காலம் வாராதோ புவி எனக்கொரு மீட்சி தாராதோ என புலம்பிக் கிடந்தேன்! கன்னியவள் என்னைத் தொட்டாள் கலைமிகு கோலம் தந்தாள் இட்லிக்கு ஆடையாக்கி இதம் தந்தாள் இப்பிறப்பின் பயன் ஈதென்று அறிய வைத்தாள் கா...