நெல்லுக்கு இறைத்த நீர்....
நெல்லுக்கு இறைத்த நீர்..... தீயவர்கள் மிகுந்துள்ள ஓர் வழியாக ஒரு விவசாயி வந்து கொண்டிருக்கிறார். ஊரில் நல்ல மழை பெய்திருந்தது. வயல்களில் எல்லாம் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. அமோக விளைச்சல். இந்த ஊரின் செழிப்பான சூழல் அந்த விவசாயியை ஆச்சரியப்பட வைத்தது. அக்கம்பக்கத்தில் எல்லாம் அடாவடிக்காரர்கள் நிறைந்த ஊர் என்று பெயர் எடுத்து வைத்திருக்கும் ஊர். அடிபிடி, வெட்டு குத்துக்குப் பஞ்சம் இல்லாத ஊர். இந்தக் கொடுமைக்காரர்கள் வசிக்கும் ஊர் இவ்வளவு செழிப்பாக இருக்கிறதே. கடவுளுக்கு கண்ணே இல்லையா? என்று சொல்லி ஒரு மரத்து நிழலில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார் விவசாயி. "தம்பி...." குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறார். ஏதிரே ஒரு பாட்டி கையில் கம்போடு நின்று கொண்டிருந்தார். "என்ன..என்ன வேணும் ?" படபடவென்று பேசினார் விவசாயி. "கோபமாக இருக்கிறீர்களா....சரி பரவாயில்லை .நான் வேறு யாரிடமாவது கேட்டுக் கொள்கிறேன் "என்றபடி அங்கிருந்து கடக்க நினைத்தார் பாட்டி. "என்ன வேணும்.... சொல்லுங்க எங்கே போகணும் ?" மறுபடியும் ...