Posts

Showing posts from March, 2024

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமிகு. மு. தவமணி B.Sc.B.Ed,        கே.டி.காய்க்வாட் தமிழ்ப் பள்ளி.       சயான் கோலிவாடா        மும்பை. பணி ஓய்வு : 01.06.2023 மின்னணு மிகைபுகழ் கூடங்குளம் பேருலா முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா! கள்ளுலா ரதிலலிதா கண்ணுலா வந்தலா(ல்) காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா கட்டிலா தொட்டிலா பிள்ளை நால்வராதலா(ல்) மட்டிலா மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா! கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்) கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்) தர்மமும் தயையும் தவமணியின் கரம்பிடித்தலா! கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா மலையாய் உயர்வுலா மாறா நேசரின் அருளிலா அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா விலையிலா நட்புலா காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா! தவம் உன்றன் பெயரிலா செயலிலா அறம் நின் அறப்பணியிலா அர்ப்பணிப்பிலா விஞ்சு மதியுலா மிஞ்சு மொழியிலா பேச்சிலா கஞ்சமாய்ப் புகழ்தலால் பஞ்சம் என் ச...

சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள். நாம் எங்கே நிற்க வேண்டும் என்று நமக்கான இடத்தை  நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. மாற்றிக் கொள்ள நினைத்தால் ஏமாற்றம்தான் இறுதிவரை நிகழும். நீ நீயாக இரு. யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. தன்மானம் பாதிக்கப்படும்  இடத்திலிருந்துதான்  எதிர்ப்பு கிளம்பும். மரியாதை இல்லாத இடத்தில் மௌனமாய் இருந்துவிடு. உண்மை உன்னை பலவீனப்படுத்தும் அதற்காக உண்மையைத் தொலைத்துவிடாதே நேற்றைய எதிரி நாளைய நண்பன் என்று நம்பிவிடுவது முட்டாள்தனம். ஒருமுறை எதிரி  எப்போதும் எதிரி. கலகக்காரனிடமிருந்து தள்ளி நில். பொய்யும் புரட்டும் பொய்யனின் மினுக்கு. தேடாத உறவு தோண்டாத துறவு பணம் பேசும். மௌனம் பேச வைக்கும். அவமானம் தரும் ஊக்கம் போல் வேறொரு ஊக்கம் இல்லை. பணம் இல்லாதபோது  உறவுகளிடம் இருந்து  விலகியிரு . இல்லாமையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே. பணமில்லாதபோது  உறவினர் வீட்டிற்குச் செல்வதும் பாழும் கிணற்றில் விழுவதும் ஒன்று. வறுமையை நண்பனிடம் சொல்லாதே அதுவே அவனை உன்னைவிட்டு விலக்கிவிடும். ஆளில்லாத போது அரவமில்லாமல் பேசு. வாழ்...

பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  சேலத்து மாங்கனிச் சுவையானவளைச் சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை வளைகரம் சுமந்தவளை மாதவளை மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை ஆயிழை சித்ரா ஒரு வான்மழை! ஆரே காலனியில் பெய்த முதல்மழை மாதுங்கா முலுண்ட் கோலிவாடா மாணவர் வளை மாயம் கற்றவளை பேரருளைப் பெருமதியானவளை மாணிழை சித்ரா எமக்கு வான்மழை! தமிழானவளை தமிழாய்ந்தவளை தக்கவரைத் தரமாக்கும்வளை தளராதவளை தனித்துவமானவளை தூதுவளை போலானவளை சேயிழை சித்ரா எமக்கு வான்மழை! கனிந்தவளை கல்வி மொழிந்தவளை அன்னவளை அன்பு தந்தவளை புன்னகையிழை பொலிமுகமானவளை என்னவளை  என்நெஞ்சில் நிறைந்தவளை பூவிழை சித்ரா எமக்கு வான்மழை! ஓதும்பணி நிறைவானவளை ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை ஒத்திருகை தொழுதவளை  வாயார வாழ்த்துதும் பொன்மகளை கோழிலை சித்ரா எமக்கு வான்மழை

குறி வைத்த குறிகாரி

குறி வைத்த குறிகாரி எக்கா...எக்கா..".என்றபடி ஓடி வந்தாள் பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி. "என்ன...என்ன...இப்படி ஓடி வருகிறாய்?.. ஏதும் பிரச்சினையா?" "ஆமாக்கா.... நீங்க எப்போதும் சொல்வீங்க.. அதுதான் ...அதுதான் " மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடவென்று பேசினாள் பார்வதி. 'என்ன அதுதான்...அதுதான் என்கிறாய். அதுதான் என்ன என்று சொல்கிறாய். நிதானம்...நிதானம்.... தண்ணீர் குடிக்கிறியா?" "தண்ணீர் குடிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை" வியர்க்க விறுவிறுக்க படபடப்போடு நின்றிருந்தாள். "கொஞ்சம் தண்ணீர் குடி" என்று வலுக்கட்டாயமாக தண்ணீர் குடிக்க வைத்து ஆசுவாசப்படுத்தினேன். "நீங்க சொல்வீங்க இல்லையா...நாளிதழில் போடும் செய்திகள் எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் என்று.. நான்தான் புரிஞ்சுக்கல..." "புரியாமல் அப்படி என்ன பண்ணிவிட்டாய்..?" "குறி சொல்வதுபோல் வந்து எல்லாவற்றையும் அள்ளிகிட்டுப் போயிட்டாளே அக்கா... நான் மோசம் போயிட்டேனே அக்கா..நான் மோசம் போயிட்டேனே!" "முதல்ல இந்த ஒப்பாரியை நிறுத்து. அல்லது ப...

கூலி பாக்கி வைக்க வேண்டாம்

கூலி பாக்கி வைக்க வேண்டாம்  வேலைக்கு கூலி வேண்டும்.  கூலிக்கு வேலை வேண்டும்.  என்ன இது ....இரண்டும் ஒன்றுதானே ....இன்னொருமுறை வாசியுங்கள்.      பொருள் வேறு வேறு இல்லையா!      இதுதான் நாடு முழுவதும் கேட்கும் குரல்கள்.      வேலை இருப்பவனுக்கு சரியான கூலி இல்லை.      கூலிக்கு வேலை கிடைக்குமா என்ற கூப்பாடு மறுபக்கம்.      இப்படி இந்த இரண்டையும் சுற்றி சுற்றிதான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது.      வேலை செய்தவனுக்கு கூலி கொடுங்கப்பா...      தொழிற் சங்கங்கள் கரடியாய்க் கத்தினாலும் காது கொடுத்துக்      கேட்காத முதலாளி வர்க்கம்.      அதுவும் தினக்கூலிகள் படும்பாடு....பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, சாயங்காலம் கூலி வாங்க முதலாளி முன் கூனிக்குறுகி      நிற்பதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.      வேலைதான் ...

இருந்தவளைப் போனவளை

இருந்தவளைப் போனவளை  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்  வித்தாகவில்லை என்று பாடு"என்பார் கண்ணதாசன் இந்தப் பத்தாயிரம் மட்டும்தானா... இன்னும் உண்டு சத்தான பாடல்கள். தனிப்பாடல் திரட்டிலிருந்து கம்பர் முத்தாக அள்ளி வைத்த பாடல்கள் பல உண்டு. அவற்றிலிருந்து  இதோ உங்களுக்காக ஒரே ஒரு பாடல். தன் மகள் காதல் வயப்பட்டு விட்டாள். அதனால் அவள்  உடல் மெலிந்தாள்.கைவளை கழன்று காணாமல் போனது. இதற்குக் காரணம் யார்? யாரைப் பார்த்தாள்? யார் மீது காதல் கொண்டாள்? வேறு எங்கும் செல்லவில்லையே...அப்படியானால்.... அப்படியானால்.... யாராக இருக்கும்? தாயின் மனம் கலக்கத்தில் கண்டபடி ஏதேதோ புலம்பத் தொடங்குகிறது. அன்றொருநாள் அவள் பார்த்த அவன் அவனேதான். அவன் ஆகத்தான் இருக்க வேண்டும் . யாராக இருக்க வேண்டும் என்கிறாள்? தாய் தன் மகளின் காதல் பற்றிச் சொல்கிறாள். கேளுங்கள். தவளை தத்திப் பாயும்போது  தவளையின் கால்கள் பூவில் பட்டு அதில் இருக்கு தேன் மழைபோல்   கீழே சொரியும் . அப்படிப்பட்ட வளமுடைய  பொன்னியாறு பாயும் வளநாடு.  அங்கு மாதத்தன் என்பவன்  ...

அன்னக்கிளி அக்கா

அன்னக்கிளி அக்கா  விசயத்தைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து அழுது கொண்டே இருந்தாள் அன்னக்கிளி. "நிஜமாத்தான் சொல்லுறீயளா... யாரு சொன்னா...மாப்பிள்ளை  சொன்னாவளா அவுங்க ஆத்தாகாரி சொன்னாவளா..." அப்பா வந்து சொன்ன நேரத்தில் இருந்து அப்பாவை கேள்வி கேட்டுக் கேட்டு  குடைந்து எடுத்து விட்டார் அம்மா. " என்ன ....யாதுன்னு சொல்லிபுட்டேன்ல்ல... இனி ஆக வேண்டியதைப் பாரக்க வேண்டியதுதான்" சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அப்பா. "என்ன சொல்றிய...சட்டியா?  பானையா? உடனே மாப்பிள்ளை சொல்ற மாதிரி மாத்துகிறதுக்கு...." வார்த்தைகளைக்  குறுக்கே போட்டு அப்பாவைப் போக விடாமல் தடுத்தார் அம்மா. "பின்ன என்னை என்ன  செய்யச் சொல்லுற..." அப்பாவின் குரலில் ஒரு இயலாமை தெரிந்தது.கூடவே இனி பேசி என்ன ஆகப்போகுது என்ற விரக்தியும் இருந்தது. என்ன செய்ய முடியும்? வேறு எப்படித்தான்  சொல்ல முடியும் ? அன்னக்கிளி அவரு பெத்த புள்ளதானே... வருத்தம் இல்லாமலா இருக்கும்...? கடனவுடன வாங்கி கட்டிக் கொடுத்துவிட்டு கடனை அடைத்து இன்னும் குறுக்கு நிவுறல. அதுக்குள்ள வந்து இப்படி...

பேராழியோ போராளியோ

Image
போராளியோ பேராழியோ  போராளியோ  பெரும்பேராழியோ விளங்கிட முடியா வேதம்தான் பெண்ணோ! இளநகை புரிந்து  இன்முகம் காட்டியவளைப் பேதை என்றது முத்தமிழோ! சிறகுகள் முளைத்துச் சிட்டாய்ப் பறந்து  செவிமடல் திறந்து செம்மையை அறிந்து கேள்விக் கணைகள் தொடுத்து கர்வம் தொலைத்தவளைப் பெதும்பை என்றது நற்றமிழோ! மாசிமாதத் தென்றலாய்  மாலை நேரத் தென்றலாய்  மயங்கிட வைத்து மனமதைத் துவைத்து மடவரலானவளை மங்கையென அழைத்தது வண்டமிழோ! உள்ளதை உரைத்து உவப்பினில் திளைத்து உன்மத்தம் கொண்டு ஊமைமொழி பேசி உள்ளம் கவர்ந்தவளை  மடந்தையென உரைத்தது தீந்தமிழோ! இமையாய் இருந்து இதயத்தில் சுமந்து இனிமையைத் தந்து இல்லம் மகிழ இளம்பிடியானவளை அரிவை என்றது அருந்தமிழோ! உள்ளங் கையில் உறவினைச் சுமந்து உலகினை அறிந்து உழைப்பினைத் தந்து உண்மையை உரைத்து உயர்யானவளை தெரிவை என்றது தண்டமிழோ! பேராளுமையோடு  வீட்டாளுமை செய்து நாட்டாமையாய்  நற்கடனாற்றி நற்பணி முடித்து நன்மகளானவளை பேரிளம் பெண் என்றது பைந்தமிழோ! இத்துணைப் பெயர்கள்  தந்தவர் எவரோ? எப்படி இப்படி என்ற வியப்புதான் நினதோ போராளியோ பெரும்பேராழியோ விளங்கிட...

மகன் வந்தான்

மகன் வந்தான்  என்றுமில்லாதபடி அங்குமிங்கும் விடியற்காலையிலேயே எழுந்து கதவைத் திறந்தாள் ராசம்மா.      பெருக்குமாறைக் கையிலெடுத்து தரதரவென்று தரையில் நாலு தேய் தேய்த்த மாதிரி இருந்தது.       அதற்குள் கையில் தண்ணீர் சருவத்தைத் தூக்கி வந்து தெளிக்க ஆரம்பித்தாள்.      எங்குதான் படித்து வந்தாளோ ராசம்மா மாதிரி எல்லா இடமும் ஒரே அளவாக கச்சிதமாக ஒரு ரோபோவால் கூட  தண்ணீர் தெளிக்கமுடியாது.      ஒருவேலை முடிந்ததும் மறுவேலைக்கு இடையில் ஒருநிமிட இடைவெளி கூட இருக்காது.      கையில் பாத்திரங்களை அள்ளி வந்து முற்றத்தில் போட்டாள்.பலகை கட்டையை எடுத்து வந்து அதில் உட்கார்ந்து பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்.      யாரோ புதுசா ஆள் வருகிறது போல ஏதோ ஒரு பரபரப்பு மனதில் வந்து ஒட்டிக் கொள்ள படபடவென்று வேலை செய்ய ஆரம்பித்தாள்.       மனசு பூரா இன்று வரப் போற மகன் மேலேயே இருந்தது.      ரொம்ப நாளுக்...

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே  கண்ணான கண்ணே கண்ணான கண்ணே கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய் கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்- பெண்ணே பேதை என்றழைக்க வைத்து பெருமிதம் தந்தாய்! வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய்  விளையாட்டே உலகமென நினைத்தாய்  விளையாட்டுக்காட்டி வீதிக்கு இழுத்தாய்- பெண்ணே பெதும்பையாய்ப் பேரன்பு செய்தாய்! உணர்ந்ததை உரையாய் உதிர்த்தாய் உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய் மமதையில் மனமதைக் கவர்ந்தாய்- பெண்ணே மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய்! மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய் மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய்  மயங்கிட வைத்து மனமதை துவைத்தாய்- பெண்ணே மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய்!  இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய் இமையாய் இருந்து எம்மைக் காத்தாய் இல்லமெங்கும் மகிழ்வால் நிறைத்தாய்- பெண்ணே அரிவையாகி அன்பால் எம்பால் கலந்தாய்!  உலக விழுமியம் சொல்லித் தந்தாய்  உன்னில் எம்மை கண்டிட வைத்தாய்-    உலகொடு உடன்  நடைபயின்றாய்- பெண்ணே  தெரிவை யானென்று  தெரிய வைத்தாய்! ஊராண்மையோடு வீட்டாளுமை செய்தாய் பேராண்மையில் பேருவகை கொண்டாய் போராளியாய்ப் ...

இரங்கற்பா

இரங்கற்பா தணியாத் தமிழே! மணியாம் எழுத்தே! பொறுமையின் சிகரமே! உழைப்பின் உயர்வே! பேச்சினில் கனிவே! பேரன்பின் வெள்ளமே! தமிழின் அடையாளமே தகைசால் தமிழனே நல்லாசிரியனே! என்னவென்று அழைப்பேன் யாரை முன்னிருத்தி இனி இப்படி விளிப்பேன்? தமிழோடு நின்றன் காதல் தணியும் முன்னே தணியாத் தாகம் கொண்டு கூற்றுவன் நின்னுயிர்  பருகினனோ? அயலக தமிழர் தினக்  கொண்டாட்டத்திற்குச்  சென்று வந்த  வாசம் மாறும் முன்னே வாரியணைத்துக் கொண்டு  துள்ளி வந்த காலன் தூக்கிச் சென்றனனோ? கூற்றுவனுக்குத்  தமிழ்க்கணக்கு தெரிந்திருக்கவில்லை தெரிந்திருந்தால்... எழுதி முடிக்கப்படா முத்தமிழுக்கு முடிவுரை எழுதி பிழைக்கணக்குச்  செய்திருப்பானோ? மாட்டேன் என்று சொல்லி மறுத்துரைக்கும் மொழி பயில  மறந்தனையோ அதனால்தான்  மாற்றான் வந்து  அழைத்தபோதும் மறுப்புரைக்காது  கூற்றானுடன்  கூட்டாகிக் கூடியுடன் நடந்தனையோ? வேண்டும் எமக்கு  உம் தொண்டு என்ற ஏக்கத்தோடு தமிழ் பள்ளிகள் ஏங்கித் தவிக்கின்றன மாநகராட்சி  கட்டிடங்கள் எங்கும் கண்ணீர்ச் சுவடுகளால் எம்மை எழுத   வைத்து கண்மூடித் ...

உலக பிராத்தனை தினம்

Image
உலக பிராத்தனை தினம் மார்ச் மாதம் முதலாம் வெள்ளி உலக பிராத்தனை தினம். இது உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெண்களால் நடத்தப்படும் ஒரு இயக்கமாக செயல்படுகிறது.. பிராத்தனை செய்வதன் நோக்கம் என்ன? பிரார்த்தனையால் என்ன கிடைக்கும் என்ற கேள்விகள் உண்டு. பிராத்தனை மனித மனதை இலகுவாக்குகிறது.  இன்றையச் சூழலில் அனைவரும் ஏதோ ஒரு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் ...பணியிடங்களில்... அக்கம்பக்கத்தில்.... சமுதாயத்தில் என்று நாலாப்பக்கங்களிலிருந்தும் சிக்கல்கள் வந்து சூழ்ந்து கொள்ளும்போது அதிலிருந்து விடுபடுவது எப்படி? யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லிவிட மாட்டார்களா என்று மனம் ஆலாய்ப் பறக்கும்.....ஆறுதலைத் தேடும். அப்படி ஆறுதலுக்காக இறைவனிடம் போய் நிற்கிறோம்.  அல்லது பிரார்த்தனைக் குழுக்களிடம் சென்று பிராத்தனை செய்கிறோம். தனிமையில் பிராத்தனை செய்வதைவிட இரண்டுபேர் மூன்றுபேர் சேர்ந்து குழுவாகச் பிராத்தனை செய்தால் நாம் விரும்பியது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும்  மன அமைதி: நமது மன அமைதிக்கான வடிகாலாக அமைந்திருப்பதுதான்  பிரார்த்தனைக் மையங...