சங்க இலக்கியத்தில் உவமை
சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை. அதைக் கதையாக எழுதலாம். கதாப்பாத்திரங்கள் சுமந்துவரும் கருத்தைச் சுவைத்து மகிழலாம். உவமை நயத்தை அள்ளிப் பருகலாம். காட்சிகளைக் மனத்துக்குள் வரைந்து களிப்பேருவகை கொள்ளலாம். பருகப் பருகத் தாகம் தணியாது மேலும் வேட்கையைத் தூண்டும். அதிலிருக்கும் ஏதோ ஒரு சுவை நம்மைக் கட்டி இழுக்கும். தம்மோடு பிணிக்கும். சொல்லப்படும் காட்சிகள். கையாளப்படும் உவமைகள். கண்முன் வந்து நின்று பேசும். என்னோடு என் இடத்திற்கு வந்து பார் என்று நம்மை கூடவே அழைத்துச் செல்லும். நம் உள்ளத்தோடு உறவாடும் உயிரோட்டமான வரிகள் யாவும் உளவியல் அறிந்த சொல்லாடல்கள். ஒரு செய்தியைச் சொல்வதற்காக புலவர்கள் கையாளும் உவமைகள் அது நடந்த இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். தான் எண்ணிய சொல்ல வந்த கருத்து வாசிப்போரைச் சென்றடைய வேண்டும். அவரை தம் பக்கமாக ஈர்க்க வேண்டும். இதுதான் படைப்பாளியின் நோக்கமாக இருக்கும். கவிதையில் சொல்லப்படும் நிகழ்வைக் கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்த வேண்டும். இதோ இங்கே ஒரு புலவர்...