விதியின் பிழை
விதியின் பிழை இந்த உலகில் பிறந்தவர் அனைவரும் மகிழ்ச்சியாக வாழத்தான் நினைக்கின்றனர்.ஆனால் நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்து விடுகிறதா? நாம் ஒன்று நினைக்க வண்டி எங்கெங்கோ நம்மை அது போக்கில் இழுத்துச் செல்கிறது. சில நேரங்களில் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்கும் முன்னர் எதிர்பாராமல் எதிலோ முட்டி நிலைகுலைய வைக்கிறது. தடுமாறி நிற்க வைக்கிறது. தலை கீழாக விழ வைக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? யாரிடம் எல்லாமோ கேட்டுப் பார்க்கிறோம். யாருக்கும் சரியாகப் பதில் கூறமுடியவில்லை. ஆனால் பெரும்பாலோனோர் சொல்லும் பதில் விதி வலியது. விதிப்படித்தான் வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் அன்று விதித்த விதியை இன்று யாராலும் மாற்ற இயலாது என்பதுதான். “ நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான்” – என்பதும் “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்;” – என்பதும் கேட்பதற்கும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் நடைமுறையில்? நடப்பவற்றிற்கும் நாம் நினைப்பவற்றிற்கும் எத்தனை மாறுபாடு? எத்தனை வேற...