Posts

Showing posts with the label மரம் பழுத்தால் வவ்வாலை -நல்வழி பாடல் விளக்கம்

மரம் பழுத்தால் வவ்வாலை....

Image
மரம் பழுத்தால் வவ்வாலை... நமக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லையே என்று வருந்துகிறீர்களா? பிறப்பால் மட்டும் வருவதல்ல உறவு. நமது செயலால் நமக்கு உறவுகளாக ஓராயிரம் பேர் வருவர். நமது மனதில் ஈரம் இருக்க வேண்டும். கண்களில் கருணை இருக்க வேண்டும்.  உற்ற நேரத்தில் இல்லாதவர்களுக்கு உதவும் நற்பண்பு இருக்க வேண்டும். இவையெல்லாம் இருந்துவிட்டால்  யாருமில்லையே  என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த நற்பண்புகள் எங்கிருந்தும் உறவுகளை உங்களிடம்  கொண்டு வந்து சேர்க்கும். அது எப்படி? யார் சொன்னது? இது எப்படி சாத்தியமாகும்? ஏன் சாத்தியமாகாது? மரத்தில் பழம் பழுத்துத் தொங்குகிறது. எந்த மரமாவது என் மரத்தில்  பழம் பழுத்திருக்கிறது.  வாருங்கள் என்று வவ்வால்களை அழைத்ததுண்டா? இல்லை வேறு எந்தப் பறவைகளுக்காவது அழைப்பு விடுத்ததுண்டா? இல்லையே.. பிறகு அதெப்படி எல்லாப் பறவைகளும்  அந்த மரத்தை நாடி ஓடி வருகின்றன? காரணம் அதன் பழம். அதன் இனிமையும்  அதன் மணமும் எல்லாப் பறவைகளுக்கும் அழைப்பு விடுத்துவிடுகிறது. பறவைகளைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. இப்போது ...