கோபப்பட வேண்டும்...
கோபப்பட வேண்டும் சினம் தவிர் என்றுதானே சொல்வார்கள். இது என்ன கோபப்பட வேண்டும்... " சும்மாவே நான் காச் ...மூச் என்று கத்திவிட்டு கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவேன். " எத்தனை போனை உடைத்திருக்கிறேன் தெரியுமா?" பெருமைப்பட்டுக் கொள்வது காதுகளில் கேட்கிறது. " இல்லை...இல்லை..." " நான் எல்லாம் ரொம்ப...ரொம்ப நல்ல பிள்ளை. ரிமோட் கண்ட்ரோலை மட்டும்தான் தூக்கி வீசுவேன்." இப்படியும் சிலர் பேசுவது போல் இருக்கிறதே. " என்னிடம் இந்த உடைத்தல்... கிடைத்தல் எல்லாம் கிடையாது. பேனாவால் நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கோ கிறுக்கென்று கிறுக்கித் தள்ளி விடுவேன்." இது பள்ளி மாணவர்களின் கிறுக்கலாகத்தான் இருக்கும். " நாங்க எல்லாம் வேற...வேற... வேற மாதிரி இல்ல. சும்மா நச்சு... நச்சுன்னு தலையணையில் நாலு குத்து குத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து எஸ்கேப...