உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை.....
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை.... "உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்" குறள் : 530 உழை - இடம் பிரிந்து - நீங்கி காரணத்தின் - ஒரு காரணத்தினால் வந்தானை - திரும்பி வந்தவனை வேந்தன் -மன்னவன் இழைத்து - நுட்பமாக இருந்து - ஆராய்ந்து, பொறுத்திருந்து எண்ணி - ஆலோசித்து கொளல் - முடிவு செய்க ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து சென்றவர் மீண்டும் திரும்பி வரும்போது அவர் வந்த காரணத்தை நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே சேர்த்துக் கொள்ளல் வேண்டும். விளக்கம் : எந்தவித காரணமும் இன்றி நம்மைவிட்டுப் பிரிந்து செல்பவர்கள் உண்டு. இது மன்னன் வாழ்க்கையில் மட்டும் நடைபெறுவதல்ல. உறவுகளில் நட்புகளில் வீடுகளில் என்று எல்லா இடங்களிலும் காரணமற்ற பிரிவு நிகழ்தல் உண்டு. அப்படி பிரிந்து சென்றவர்கள் மறுபடியும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நம்மிடம் திரும்ப வந்து சேர வருகின்றனர். அவர்களை ஐயத்தோடு பார்க்க வேண்டா...