வானோக்கி வாழும் உலகெல்லாம்...
வானோக்கி வாழும் உலகெல்லாம்.... வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி " குறள். : 542 வான் - மழை நோக்கி - எதிர்பார்த்து வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு - உலகத்தார் எல்லாம் - அனைவரும் மன்னவன் - வேந்தன் ,அரசன் கோல் - செங்கோல் நோக்கி - எதிர்பார்த்து, நம்பி வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கின்ற குடி - குடி மக்கள் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி உயிர் வாழ்கின்றன. அதுபோல குடிமக்கள் எல்லாம் மன்னனுடைய செங்கோல் வழுவா ஆட்சியை எதிர் நோக்கியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விளக்கம் : நீரின்றி அமையாது இவ்வுலகம் என்று சொன்ன வள்ளுவர் மழை இல்லை என்றால் இப்புவியில் பசும்புல் தலை காண்பதும் அரிதாகிவிடும் என்றும் ச...