தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து 'நீராருங் கடலுடுத்த...." எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட தமிழகத்தின் வாழ்த்துப் பாடலாகும். இப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள். இவர் எழுதிய நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள வணக்கப் பாடலின் ஒருபகுதி தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்கப்பட்டுள்ளது. இப்பாடலை 1970 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையின்கீழ் செயல்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. இதற்கு இசை அமைத்தவர் எம். எஸ்.விஸ்வநாதன் அவர்கள். பாடல் இதோ : " நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுகும் சீராரும் வதனமென திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணம...