Posts

Showing posts with the label நூற்றாண்டு விழா மகிழ்வில் மாதுங்கா -வாழ்த்துக் கவிதை

நூற்றாண்டு விழா மகிழ்வில் மாதுங்கா

நூற்றாண்டு விழா மகிழ்வில் மாதுங்கா  அனைவர்க்கும் வணக்கம் 🙏  பார்த்துப் பழகிய முகங்கள் பேசி உறவாடிய உதடுகள் ஒற்றைப் புன்னகையோடு கடந்து போன ஆசிரியர்கள் கண்டும் காணாமல்  கடந்து போன நிகழ்வுகள் ஒவ்வொன்றாய்  வரிசைகட்டி வந்து நின்று முட்டி மோத உள்ளம் உறவாட கண்கள் கருத்துப்  பரிமாற்றம் நிகழ்த்த மலரும் நினைவுகள் மனதுக்குள் கொஞ்சி விளையாட நினைவுகள் நெஞ்சைத் தாலாட்ட மிஞ்சும் மகிழ்வில் நெஞ்சம் தொலைத்து   மகிழ்வோடு பள்ளியில் பணியாற்றிய நாட்களைத் திரும்பிப் பார்க்க வாய்ப்பளித்தது இந்த  நூற்றாண்டு விழா மாதுங்கா பள்ளியின் பழைய நினைவுகள்  ஒவ்வொன்றாய்  கண் முன்னர் வந்து நலம் விசாரித்து நிற்க பணிசெய் நாட்களை அணிசெய் வினைகளை அளவளாவிய நாட்களை  மனம் அசைபோட்டுப் பார்க்கிறது கரும்பலகையோடு கைகலப்பு  நடத்திய வகுப்பு வாசலில் வாய்தா கேட்டு கிஞ்சித்தும் தயக்கமில்லாக் கண்கள்  கெஞ்சி நிற்கிறது மாதுங்கா  பள்ளி  வெறுமனே ஒரு சொல்லல்ல ... இது ஒரு சரித்திரம் கற்றவர்க்கும் கற்பித்தவர்க்கும் கல்வித் திறன் மேம்பாட்டு  பயிற்சிப் பாசறை இது ஒரு கட்...