உன்னோடு வாழ்தல் அரிது
உன்னோடு வாழ்தல் அரிது அரியது எது என்ற கேள்விக்கு, அரியது கேட்கின் வரி வடிவேலோய் அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது பேடு நீங்கி பிறந்த காலையும் ஞானமும் கல்வி நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்தகாலையும் தானமும் தவமும் தான் செயல் அரிது தானமும் தவமும் தான் செய்வ ராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே!" என்றார் ஔவை. அருமையானப் பாடல். பாடலைக் கேட்டதும் எந்தவித உடற்குறையும் இல்லாமல் வாழ்தல் அரிதினும் அரிது என்று மனதில் எழுதி வைத்துக் கொண்டோம். நமக்கு அப்படி ஒரு குறையில்லா உடலைத் தந்தமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். அப்படிச் சொல்லித் தந்த ஔவை கூடவே ஞானம், கல்வி நயந்து பெற்றிருந்தாலும் தானம் தவம் செய்தல் அரிது என்று அரிதானவற்றை வரிசைப்படுத்திச் சொல்லித் தந்தார். அருமையாக விளக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்புமைப்படுத்தி எல்லாமே அரிதானவைதான் என்று நம்மை ஒத்துக்கொள்ள வைத்தப் பாடலைத் தந்து நம்மையும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைத்தார் ஔவை. இப்போது அரிது எது என்று ஒரு முடிவான கருத்துக்கு வந்துவிட்ட...