அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
அன்னையும் அத்தனும் அல்லரோதோழி தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். நெடுநாள் ஆகிவிட்டது. அவன் இன்னும் வந்தபாடில்லை. தலைவி ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள். உடல் மெலிகிறது. தலைவியால் எதிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. தலைவியின் ஏக்கம் கவலை,உடல் வாட்டம் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தோழியால் அதற்கு மேலும் சும்மா இருக்க முடியவில்லை. தலைவன் மீது கோபம் கொள்கிறாள். அவனை அன்பில்லாதவன் அதனால்தான் உன்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்று கோபமாகப் பேசுகிறாள். தலைவன் தன்னைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டானே என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அவன்மீது பிறர் குறை கூறுவதையோ கோபமாகப் பேசுவதையோ அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை . கோபமாகப் பேசிய தோழிக்குப் பதிலாக இதோ இவ்வாறு பதில் உரைக்கிறாள் தலைவி. பாடல் இதோ.... நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே. -அள்ளூர் நன்முல்லையார். (குறு.93) என்னுடைய அழகு தொலைந்து, உடல் நலம் மிகவிழந...