Posts

Showing posts with the label வருமுன்னர் காவாதான் வாழ்க்கை

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை....

Image
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை.... " வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் "                                குறள்  : 435                                 வருமுன்னர் _ வருவதற்கு முன்னர் காவாதான் _ காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை _ வாழ்வு எரி _ நெருப்பு முன்னர் _ முன்பாக வைத்தூறு _ வைக்கோல் குவியல் போல _ போன்று கெடும் _ அழியும் தவறு நிகழ்வதற்கு முன்னமே தவறு வராமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்படிக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பின்முன்  வைக்கப்படும் வைக்கோல் போல  அழிந்து போய்விடும். விளக்கம்.: ஒரு துன்பம் வருவதற்கு முன்னர் விழிப்புணர்வோடு இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். வந்த பின்னர் வருந்தி பயனில்லை. எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  வந்த பின்னர் பார்த்துக் கொள்வோம் கவனமில்லாமல் இருந்தால் எல்லா நேரங்களிலும் சூழல் நமக்குச் சாதகமாக அமையாது. எதிர் விளைவுகள் ஏற்பட ...