சின்னஞ்சிறு கிளியே....
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா.... பாரதியின் கண்ணன் பாட்டு பாரதியின் கண்ணம்மா பாட்டு இரண்டும் அதிகம் பேசப்படும் பாடல்கள். கண்ணன் பாட்டு தெரியும். கண்ணம்மா பாட்டா? அப்படி ஒரு பாட்டு பாரதி பாடியிருக்கிறாரா என்று கேட்கிறீர்களா? பாரதி கண்ணனை குழந்தையாக உருவகித்துப் பாடிய பாடலான சின்னஞ்சிறுக் கிளியே என்ற பாடலைத்தான் நான் கண்ணம்மா பாட்டு என்கிறேன். இந்தப் பாடலில் கண்ணனை ஒரு குழந்தையாக எப்படி எப்படி எல்லாம் கொஞ்சி மகிழ்கிறார் பாரதி என்பதைப் பாருங்கள். கண்ணன் என்ற கண்ணம்மா பாரதியை என்னென்ன பாடுபடுத்தியிருக்கிறாள் என்பதைச் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டிருக்கிறார். கண்ணம்மா பாரதியைத் திக்குமுக்காட வைத்திருக்கிறாள். சஞ்சலப்படுத்தியிருக்கிறாள். ஓடி விளையாட வைத்திருக்கிறாள் உச்சி குளிர வைத்திருக்கிறாள். கள்வெறி கொள்ள வைத்திருக்கிறாள். கண்ணின் இமையாய் இருந்திருக்கிறாள். நெஞ்சத்தில் அள்ளி அணைத்து ஆனந்தப்பட வைத்திருக்கிறாள். உயிராய் உணர்வாய் உறவாய் இருந்து மகிழ வைத்திருக்கிறாள். அதைத்தான் பாரதி தனது சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலில் சொல்லிப் சொல்லிக் கொண்டாடி மகிழ்ந்திருக்...