தத்துவஞானி சாக்ரடீஸ்
தத்துவஞானி சாக்ரடீஸ் தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர் என்பர். லத்தீன் மொழியில் ஃபிலாஸ் என்றால் அறிவு. ஸோஃபியா என்றால் நேசிப்பது . அப்படியானால் தத்துவம் என்பதற்கு அறிவை நேசிப்பது என்று பொருள் கொள்ளலாம். அறிவார்ந்த சிந்தனைகளை விதைத்தவர்கள் தத்துவஞானிகளாக வரலாற்றில் அடையாளப்படுத்தப் படுகின்றனர். மிக உயர்ந்த தத்துவங்களை விதைத்த உயர்ந்த சிந்தனையாளர்களை உலகிற்குத் தந்த பெருமை கிரேக்க நாட்டையே சாரும். பழம்பெரும் நாகரிகச் சிறப்பும், கலையும், இலக்கியமும், வீரமும் நிறைந்த இந்த மண்ணில் பிறந்தவர்தான் தத்துவஞானிகளின் தந்தை என்று அழைக்கப்படும் சாக்ரட்டீஸ் ஆவார். சாக்ரடீஸ் பற்றி அறியாமல் உலக அறிவுச் சிந்தனைத் தளத்திற்குள் பயணிக்க முடியாது. உலக வரலாற்றில் இவரின் சிந்தனை மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. வரலாற்று நாயகர்கள் வரிசையில் என்றும் நிலையான இடம் பிடித்தவர்களில் முதன்மையானவர் சாக்ரடீஸ் பண்டைய கிரீஸ் நாட்டின் ஒரு பகு...