பினாங்குக்காரர்
பினாங்குக்காரர் கண்ணம்மாவைத் தெரியாதவர் யாரும் அந்த ஊரில் இருக்க முடியாது. அவ்வளவு பிரபலம். எல்லாருக்காகவும் ஓடி ஓடி உதவும் குணம். ஊருல ஒருத்தருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஆஜர் ஆகி நிற்பது கண்ணம்மா மட்டும்தான். கைப்பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கணுமா... கண்ணம்மாவைத் தவிர யாரும் அவ்வளவு பக்குவமா மருந்து கொடுத்திட முடியாது. எந்த வீட்டுல குழந்தை பிறந்தாலும் கண்ணம்மாவின் ஆஜர் இருக்கும். கண்ணம்மா வந்தாலே அந்த இடம் கலகலப்பாகிவிடும். முடுக்கிவிட்டு வேலை வாங்குவார். என்ன பண்ணணும் ஏது பண்ணணும் என்று சொல்லிக் கொடுப்பார். வீட்டில் கிடக்கும் தட்டு மூட்டு வேலைகளை கூட இருந்தே செய்து கொடுப்பார். ஆனால் யார் வீட்டிலும் அநாவசியமாக கை நனைக்க மாட்டார். கறாரானப் பேர்வழி. இப்படி ஓடி ஓடி ஊருக்கு உழைத்து வரும் கண்ணம்மா ஓய்ந்து போய் விட்டத்தைப் பார்த்தபடி கிடக்கிறாள். நினைவலைகள் எங்கெங்கோ சுற்றி வருகின்றன. பினாங்குக்காரர் மட்டும் இருந்திருந்தால்.... எங்கு போனாலும் இந்தப் பினாங்குக்காரர் நினைவு மட்டும் நெஞ்சைவிட்டு அகலவே மாட்டேங்குது.... இனி நினைச்சு என்ன ஆ...