பாவி யார்
பாவி யார் பாவம் செய்தவர்கள் நரகத்துக்குப் போவார்கள். நல்லது செய்பவர்கள் மோட்சத்திற்குப் போவார்கள் இப்படிச் சொல்ல கேட்டிருக்கிறோம். மோட்சம் எங்கே இருக்கிறது என்றால் மேலேயும் நரகம் எங்கே இருக்கிறது என்றால் கீழேயும் கையைக் காட்டி வழியைச் சொல்லித் தந்து வளர்க்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் நரகத்தையோ சொர்க்கத்தையோ பார்த்தவர் எவரும் உண்டா என்றால்.... கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் இதுதான் பதிலாக இருக்கும். பாவி யார் என்று கேள்வி கேட்டால் தீயசெயல்கள் செய்பவர் அனைவரும் பாவிகள் என்று பட்டென்று சொல்லிவிடுவோம். எவை தீயசெயல் என்று கேட்டால் ஆளாளுக்கு சற்று மாறுபட்டு நிற்போம். ஒருவர் தீமை என்று நினைப்பது இன்னொருவருக்குத் தீமையாகத் தெரியாது. காலமும் சூழலும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பாடங்களைக் கற்பித்திருக்கும். அதனால்தான் சிந்தையில் மாறுபாடும் வேறுபாடும் கொண்ட மனநிலையோடு வளர்ந்திருக்கிறோம். பாவம் செய்தவன் பாவி. என்ன பாவம் செய்தவன் பாவி? இந்தக் கேள்விக்கு நீங்கள் எதிர்பாராத பதிலைத் தருகிறது விவேக சிந்தாமணி. யார் பாவி என்று சொல்லும் விவேக் சிந்தாமணி பாடல் உங்களுக்காக...