வல்லணங்கு
வல்லணங்கு அவளுக்கும் எனக்கும் அப்படி என்னதான் இருக்கிறது? ஏனிந்த கண்ணாம்மூச்சு விளையாட்டு.? என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை. யாரிடம் போய் கேட்பது? என்ன கேட்பது? சே...சே....யாராவது தப்பாக நினைத்து விட்டால்..... அதற்காக? மனசுக்குள்ளே வைத்துப் பூட்டி வைக்கப் போகிறாயா? நீ மூடி மறைத்தால்.... யாருக்கும் தெரியாமல் போய்விடுமா? தெரிகிற காலத்தில் தெரிந்துவிட்டுப் போகட்டும் என்று சாதாரணமாக விட்டுவிடுகிற காரியமா இது? நீரு பூத்த நெருப்புபோல உள்ளுக்குள்ளேயே வைத்து எத்தனை நாள் கனன்று கொண்டிருப்பது? விடை தேட முடியாமலும் விடை கேட்க முடியாமலும் ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. இதற்கிடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எத்தனையோ நிகழ்வுகள்! அவை எல்லாம் நடந்து முடிந்த சிறிது காலத்தில் துடைத்துப் போட்ட வானமாக மனம் ஒன்றுமில்லாமல் ஆனது. அப்படியே போயிருக்கலாமே? இடையில் ஏன் இந்த இணக்கும் பிணக்கும்.? இணக்கம் இல்லாது ஓடிய நாட்கள் இனிமையாக இருந்தன யாரைப் பற்றிய சிந்தனையும் இல்லை. ஆனால் இடையில் இந்த ஒட்டு வேண்டும் என்று யார் அழுதது? விதி செய்த சதியா? சதிகாரர்கள் பின்னிய ப...