Posts

Showing posts with the label செய்தி சொன்ன சேதி-விழிப்புணர்வு கட்டுரை

செய்தி சொன்ன சேதி

செய்தி சொன்ன சேதி "எக்கா...எக்கா..".என்றபடி ஓடி வந்தாள் பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி. "என்ன...என்ன...இப்படி ஓடி வருகிறாய்?.. ஏதும் பிரச்சினையா?" "ஆமாக்கா.... நீங்க எப்போதும் சொல்வீங்க.. அதுதான் ...அதுதான் " மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடவென்று பேசினாள் பார்வதி. 'என்ன அதுதான்...அதுதான் என்கிறாய். அதுதான் என்ன என்று சொல்கிறாய். நிதானம்...நிதானம்.... தண்ணீர் குடிக்கிறியா?" "தண்ணீர் குடிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை" வியர்க்க விறுவிறுக்க படபடப்போடு நின்றிருந்தாள். "கொஞ்சம் தண்ணீர் குடி" என்று வலுக்கட்டாயமாக தண்ணீர் குடிக்க வைத்து ஆசுவாசப்படுத்தினேன். "நீங்க சொல்வீங்க இல்லையா...நாளிதழில் போடும் செய்திகள் எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் என்று.. நான்தான் புரிஞ்சுக்கல..." "புரியாமல் அப்படி என்ன பண்ணிவிட்டாய்..?" "குறி சொல்வதுபோல் வந்து எல்லாவற்றையும் அள்ளிகிட்டுப் போயிட்டாளே அக்கா... நான் மோசம் போயிட்டேனே அக்கா..நான் மோசம் போயிட்டேனே!" "முதல்ல இந்த ஒப்பாரியை நிறுத்து. அல்ல...

செய்தி சொன்ன சேதி

செய்தி சொல்லும் சேதி  அதிகாலை எழும்பியதும் காபி குடிக்கிறோமோ இல்லையோ கண்கள் நாளிதழைத் தேடும். ஒருமுறை அதிகாலையிலேயே நாழிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால்... அதற்கு நாம் அடிமையாகிவிடுவோம். நாளிதழ் வருவதற்குச் சற்று நேரமாகிவிட்டால் கண்கள் எதையோ தேடி காத்திருக்கும். நாளிதழ் படிப்பதிலேயே நான் முந்தி ...நீ முந்தி ...என்று வீடுகளில் சண்டை ஏற்படுவதுண்டு. பத்துப் பதினைந்து நிமிடம்தான் இந்த நாளிதழ்  களேபரம். படித்து முடித்தப் பிறகு  நாளிதழ் மேசைமீது  அனாதையாகக் கிடந்து ஆடி ஆடி அழைக்கும். யாரும் சீண்டுவார்களா என அசைந்து அசைந்து எட்டிப் பார்க்கும். அசைவில் கீழே விழ பழைய பேப்பர் அடுக்குக்குமேல் கொண்டுபோய் வைக்கப்பட்டுவிடும். அத்தோடு நாழிதழுக்கும் நமக்குமான உறவு முடிந்து போயிற்று. ஆனால் செய்திக்கும் நமக்குமான தொடர்பு அத்தோடு முடிந்து போயிற்றா? முடித்துக் கொள்ளலாமா? அதற்காகவா நாளிதழ்கள் இத்தனை செய்திகளை சுமந்து வருகின்றன ? எவ்வளவு கரிசனமாக அங்கேயும் இங்கேயும் ஓடி , அல்லும்பகலும் பாராது  ஊண் உறக்கமின்றி, தேடித்தேடி செய்தி சேகரித்து, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு , அச...