பணிநிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல் தண்டமிழ் வண்டலைப் பூங்காடுடை தென்தமிழக எல்லை நகர்உறை இணையர் ஜெயசிங் முத்தாபரணம் மெத்தைமடியில் சில்லென்று பூத்திருந்த செந்தாமரை சாந்தி! கொழுந்தன் ஞானராஜன் கைத்தலம் பற்றி-நீ கோநகர் மும்பைக்குச் சீராய்வந்த நற்றமிழோ! கோவின் குடிகாத்து நிற்கும் குலமகளோ கோமகனாய் பிள்ளை இருவர் வாய்த்ததுன் வரமோ!! கற்றவர் போற்றிடும் நற்றிணையோ- நீ கற்பவர் தொழுதிடும் நற்றுணையோ! நற்பெயர் நிறை நல்மதிதான் உனதோ நறுமலர் மொய்த்த நந்தவனம் நீயோ! விண்மகள் ஈன்ற தண்ணிலவோ - நீ மண்மகள் மீட்டும் பண்ணிசையோ க(ண்)ணவன் கொண்டாடும் பேரழகோ மண்டுநலன் கொண்ட பேருனக்கானதுவோ! கற்பனை பெருகும் சொற்றுணையோ - நீ நற்றமிழ் வழங்க வந்த உயர்திணையோ தெற்றில்லா மொழி பழகு நாவணியோ மட்டிலாக்கல்வி தருதல்தான் நின்பேரறமோ ! பிரைட் பள்ளியில் அறப்பணி ஆண்டு ஐயாறு-நீ பொய்யாது பாய்ந்த பைந்தமிழ்ப் பாலாறு தொய்யாது நடத்திய உன் சொல்லாறு மெய்யாகச் சொல்லி நிற்கும் தமிழ்வரலாறு! ஓய்விலும் நின்பணி தொடர்ந்திடல் வேண்டும் -நீ ஓயாது இறைப்பணி ஆற்றிடல் வேண்டும் எண்ணும் செயல்யாவும் கைகூடல் வேண்டும் நண்ணும் வண்ணம...