வெண்பா வகைகள்
வெண்பா வகைகள் செய்யுள்கள் அல்லது பாக்கள் அவற்றின் சீர்களுக்கு இடையே உள்ள தளைகளின் தன்மையின் அடிப்படையில் வெவ்வேறுவிதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன.ஓசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்கின்றன. பா வகைகள்: பாவகைகள் ஐவகைப்படும். அவை : செப்பலோசையை உடைய வெண்பா அகவலோசையை உடைய ஆசிரியப்பா துள்ளலோசையை உடைய கலிப்பா தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா என்பனவாம். வெண்பா : வெண்பாவிற்கான ஓசை செப்பலோசையாகும். செப்பல் என்றால் செப்புதல், உரைத்தல் , விடை கூறுதல் எனப்படும். வினாவிற்கு விடை கொடுப்பது போன்ற ஓசை இ...