சாதி இரண்டொழிய
சாதி இரண்டொழிய .... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். பிறப்பால் அனைவரும் ஒன்று. மேல் கீழ் என்ற பாகுபாடு இல்லை என்று உச்சந்தலையில் ஓங்கி அடித்துச் சொல்லித் தந்துவிட்டார். சாதி என்னும் பாகுபாடு இருக்கும்வரை சமூகநீதி முற்றிலுமாக கிடைத்துவிடும் என்று நம்பமுடியாது. நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களும் இன்று சாதிய அமைப்புகளை வைத்துக்கொண்டு சாதி கூட்டங்களை நடத்திக்கொண்டு வருவது சற்று நெருடலாகத்தான் உள்ளது. சாதி என்ற பெயரால் ஏற்றத்தாழ்வு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. அது முற்றிலும் களையப்பட வேண்டும் என்றால் சமூக நீதியை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும. இப்போது ஔவை சாதியைப் பற்றி என்ன கூறுகிறார் என்று கேளுங்கள். "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி" என்கிறார் ஔவை. உலகில் எத்தனை சாதி உண்டு என்று கேட்டால் இரண்டே சாதிதான் உண்டு. ஒன்று ஆண்சாதி. இன்னொன்று பெண்சாதி என்று சிலர் பெருமையாகச் பேசுவர். ஆண்,பெண் என்பது சாதி அல...