Posts

Showing posts from January, 2025

வாடகை வீடு

வாடகை வீடு ராதா ஒரு முறைக்குப் பலமுறை  யோசித்துப் பார்த்தாள்.  ஏற்பதா....? மறுப்பதா..? ஏற்றுக்கொண்டால்...அரைவயிறும் கால்வயிறுமென அன்றாடம் வயிற்றோடு நடத்தும் போராட்டத்துக்கு ஒரு இடைக்காலத் தீர்வு கிடைக்கும். ஆனால்.. அதன்பின்னர் சமுதாயத்தில் என்நிலை.... எனக்கென்று தனி முத்திரை குத்தி ஒரு மாதிரியாக பார்ப்பர். அதனை என்னால் சமாளிக்க முடியுமா? வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் யாராவது ஒரு வழிகாட்டிவிட மாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு கண்கள் எதிர்பார்த்து காத்திருந்தபோது எதேச்சையாக காப்பகத்தில் சமையல் வேலை  பார்க்கும்  மேரி அக்காவைச் சந்திக்க நேரிட்டது. உன் குடும்பச் சூழலுக்கு என்னால் உதவ முடிந்த ஒரே வழி இதுதான் என்று ஒரு மாதத்திற்கு முன்னர்தான் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஆயா வேலை வாங்கிக் கொடுத்தார்கள். காப்பகத்தில் ஆயா வேலைக்குச் சேர்ந்த  பின்னர்தான் காப்பகத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவம் பார்க்க வரும் நர்ஸ் அக்காவோடும் பழக்கம் ஏற்பட்டது. வீட்டுப் பிரச்சினைகளைப் பற்றியும்  பேசுவோம். அப்போதுதான் நர்ஸ் அக்கா இப்படி ஒரு ஆஃபர்  இருப்பதாக சொன்னார். கேட்டத...

அப்படிப்பட்டவள் இல்ல...

அப்படிப்பட்ட புள்ள இல்ல .... .... மதிய இடைவேளைக்குப் பிறகு வகுப்பு  தொடங்குவதற்கான மணி அடித்தது. அங்கங்கே நின்ற  பிள்ளைகள் ஆளாளுக்கு  அவரவர் வகுப்பை நோக்கி ஓடினர்.  மூன்றாம் வகுப்பு மாணவர்களும் தங்கள் வகுப்பிற்குள்  வந்து அமர்ந்தனர்.    ராணியும் கூட சேர்ந்து வந்து தன் இடத்தில்  உட்கார்ந்தாள்.    ராணி  வகுப்பில் அமர்ந்ததுதான் தாமதம் ,  "வந்தியா... வந்தியா....இப்போ அக்காவிய வரட்டும்.  கெட்ட வார்த்தை போட்டாய் என்று அக்காவிய கிட்ட உன்  பெயரைச் சொல்வேன்  " தலையைத் தலையை   ஆட்டினாள் பொன்னு.   " இன்னைக்கு உனக்கு இருக்கு...உனக்கு இருக்கு  அக்காவிய வந்ததும் நல்லா பூசை வாங்கு " கூட   சேர்ந்து தாளம் போட்டாள் சந்திரா.   கேட்டதும்  ராணிக்கு முகமெல்லாம் குப்பென்று  வியர்த்துக் கொண்டு வந்தது.   பைக்குள் கையைப் போட்டு பென்சிலையும்     பென்சில் சீவலையும் எடுத்தாள்.      கையில் பென்சிலோடு எழுந்த  ராணியைப் பார்த்ததும், " ஏய்...குத்தப...

வீட்டுக்கு வீடு வாசற்படி

வீட்டுக்கு வீடு வாசற்படி  "ஆளாளுக்கு என்னை இப்படித் துரத்தினால் நான் எங்கே போவேன்.? யாரிடம் போய் நிற்பேன்? யார் இருக்கிறார்கள் எனக்கு? சொல்லி அழகூட ஒரு சனம் இல்ல....யாரிடம் போய் என் குறையை சொல்லுவேன்.? சாமி....நீதான் கேட்கணும் "என்று வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில் இருந்த கோவிலைப் பார்த்துக் கையெடுத்துக்  கும்பிட்டார் அன்னப்பழம் பாட்டி. இந்தப் புலம்பல் இன்றுமட்டும் நடக்கவில்லை. கடந்த நாலு வருசமா பாட்டி இப்படித்தான் புலம்பி கிட்டு திரியிறாங்க. மருமகள்கள் ஏதும் சொல்லிவிட்டால் மகனிடம் போய் சொல்லுவார். மகன்" உனக்கு எதுக்கு வம்பு? வயசான காலத்துல வாயை வச்சுகிட்டு சும்மா கிடைக்கத் தெரியல என்றால் ஆளாளுக்குக் கேட்கத்தான் செய்வாளுங்க" என்று சொல்லிவிட்டால் போதும், "எனக்குப் பிறந்ததும் சரியில்ல...  வந்ததும் சரியில்ல "என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பாட்டியின் புலம்பல் கடவுள் காதுக்குத்தான்  இன்னும் போய் சேரல... "என்ன அன்னப்பழம் சாப்பிட்டாச்சா...." கேட்டபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் பக்கத்துவீட்டு மாசானம் மனைவி மாடத்தி. ஏதோ நினைவில் இருந்த பாட்டிக்க...

ஔவியம் பேசேல்

ஔவியம் பேசேல்  ஆத்திசூடி எளிமையான சொற்றொடர் உடைய நீதி கருத்துகள் கொண்ட பாடல்.           ஔவையின் ஆத்திசூடி படிக்காமல் தமிழ் எழுத்துகளைப் படித்தவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆத்திசூடியைப் படித்ததும் பொருள் விளங்கும் . அதனால் அதன் பொருளை அறிவதற்கு யாரும்      மெனக்கெடுவதில்லை.  பள்ளியில் தெரிந்த பொருளை சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.   ஆசிரியர் சொன்னதுதான் வேத வாக்கு.    சில ஆசிரியர்கள் மனப்பாடம் செய்ய வைப்பார்களே தவிர பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  அறியாத பருவத்தில் தெரியாத பொருளோடு கடந்து வந்து விட்டோம்.  மறுபடியும் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாது இருந்திருப்போம்.   யாராவது படித்தவர்கள்தானே என்று ஔவியம் பேசேல் என்பதற்கு பொருள் கேட்டால் மலங்க மலங்க விழிப்போம்.  கற்று கற்றுக் கொடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள். தெரியாமல்  இருப்பது இமாலய குற்றம் அல்ல.        ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாதிருப்பது ...

இட்லியோ இட்லி

Image
இட்லியோ இட்லி  மார்ச் 30 உலக இட்லி தினம். இட்லிக்கும் ஒரு தினமா? மீந்து போன இட்லி மாவில் சுடும் தோசைக்கே ஒரு தினம் இருக்கும்போது இட்லிக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா என்ன ? இட்லி என்றாலே தமிழர் உணவுதான். இட்லி சாம்பாருக்குப் பேர் பெற்றவர்கள் நாம் தான் . இதில் பெருமை உண்டு. எவ்வளவுதான் மல்லிகைப்பூ இட்லி, குஷ்பு இட்லி என்று பெருமைமையாகப் பேசினிலும் இட்லியின் பிறப்பிடம் தமிழகம் இல்லையாம். என்னது இட்லி நம்ம ஊர்  உணவு இல்லையா? இவ்வளவு நாளும் எங்க ஊர் இட்லிக்கு இணையாகுமா உங்க ஊர் உணவு வகைகள் ...என்று எத்தனை இடங்களில் எத்தனை மொழி பேசுபவர்களின் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டிருக்கிறேன். இப்படி பொசுக்கென்று இப்படி சொல்லிலிபுட்டீங்களே....என்கிறீர்களா? விடுங்கள். இந்தோனேசியாகாரர்கள் வேண்டுமென்றால் இட்லியின் தாயகம் இந்தோனேசியா தான் என்று  பெருமைப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால்  இட்லியைத் தரமேம்பாட்டுக்கு உட்படுத்திய  பெருமை நம்மைத்தான் சேரும்.இதை யாரும் தட்டிப்பறித்துச் சென்றுவிட முடியாது. எத்தனை விதமான இட்லி வகைகளை அவித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்தத் தானிய...

தந்தை தாய்ப் பேண்

தந்தை தாய்ப் பேண்  தந்தை தாய்ப் பேண் " அனைவருக்கும் பிடித்தமான  ஆத்தி சூடி பாடல் வரிகள். அடிக்கடி பலர் வாய்களில் வந்து போகும் வரிகள். பெற்றோரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் வரிகள். பெற்றோரைப் பேணி பாதுகாத்துக் கொள் என்று வேறு யாராவது நினைவுபடுத்த வேண்டுமா என்ன? "மறந்தால்தானே  நினைப்பதற்கு.. உன்னை நெஞ்சிலேயே வைத்திருக்கிறேன் " என்று காதலியிடம் வசனம் பேசுவான் காதலன். ஆமாங்க...மறந்தால்தானே நினைவூட்டல் வேண்டும். நாம்தான் பெற்றோரை மறக்கவில்லையே... பிறகு எதற்கு இந்த நினைவூட்டல் என்கிறீர்களா.... மறந்தவர்களுக்கு ...நினைவூட்டல் தேவை இல்லையா... அதனால் தான் தந்தை தாய்ப் பேண்  என்று நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார் ஔவை. வயது முதிர்ந்தாலே பெற்றோர் பிள்ளைகளுக்குச் சுமையாகிப் போகின்றனர். காய்ந்த ஓலை விழும்போது பச்சை ஓலை சிரித்ததாம். அதற்கு காய்ந்த ஓலை நாளை நாளைத்தான் என்றதாம். அந்த நாளை நாளைத்தான் என்ற தொடரின் பொருள் என்ன ? நாளைக்கு உனக்கும் இதே நிலைதான் என்பதுதான். ஆனால் பெரும்பாலானோர் இதை உணர்வதே இல்லை. முதுமை வராமல் என்றும் இளமையாய் யாரும் இருந்துவிடப் போவதில்லை. நாளைக்காக பொ...

அணிற் பல்லன்ன...

Image
அணிற் பல்லன்ன.... புன்னை மரத்தின் கீழ் தலைவி ஒருத்தி நின்றிருக்கிறாள். புன்னை மரத்தில் அணில் ஒன்று   அங்குமிங்கும் தாவித்தாவி புன்னங்கனிகளை ஒரு கடி கடித்து கீழே வீசி விளையாடுகிறது. புன்னம் இலைகளுக்கு இடையே பூத்துக் கிடக்கும் பூக்களை உடலோடு உரசி விளையாட்டு காட்டுகிறது. அணிலின் விளையாட்டினைக் கண்ட காற்றுக்கு கிளைகளை அசைத்து  நாமும் கொஞ்சம் அணிலோடு  விளையாடலாமே என்ற ஆசை வந்துவிட.... சற்று வேகமாக மரக் கொம்புகளை ஆட்டி அணிலை ஊஞ்சலாட வைக்கிறது. அணிலின் ஊஞ்சலாட்டமும் கொம்புகளின் உரசலும்  பூக்களை ஒன்றோடொன்று  முத்தமிட்டு விளையாட வைத்துவிட பூந்தாது இதழ்களில் ஒட்டிக்கொள்கிறது. இதழ்களின் மீதிருக்கும் தாதினைப் புன்னம் இலைகள்   துடைத்து நிற்க, பூக்கள் நன்றி சொல்வதுபோல் மலர்ச்சி காட்ட என்று புன்னை மரத்தில் அழகிய காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியில் தன்னை மறந்து நின்றவளைத் தொட்டு உலுக்கிய தோழி பாவை, "என்ன கனவு பலமாக இருக்கிறதோ?" என்றாள். "அப்படி ஒன்றுமில்லை. அந்த அணில் விளையாடுவதைப் பார்த்தேன்.அவ்வளவுதான்" "அவ்வளவுதானா? வேறு ஏதேனும் நினை...

தேம்படு பனையின் திரள்....

தேம்படு பனையின் திரள்... "பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்" அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன் பாடிய வெற்றிவேற்கையிலிருந்து எடுக்கப்பட்டவைதான் இந்தப் பாடல் வரிகள். நான் பெரியவனா  நீ பெரியவனா? என்ற போட்டியில் எழுவதுதான் பூசலும் பொறாமையும் போரும். பழத்து ஒருவருடைய வளர்ச்சியை இன்னொருவரால் ஏற்றுக்கொள்ள  முடியாதபோது போர்மேகங்கள் சூழ்வதுண்டு. உன்னைப் பற்றி நீ முடிவு செய்யக்கூடாது. உன் செயல்களை வைத்து நீ எப்பேர்ப்பட்ட வன் என்பதை உலகம் முடிவு செய்து கொள்ளும். நமது வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? பிறருக்குப் பயன் தருவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த வளர்ச்சி பெரிய வளர்ச்சியாகக் கருதப்படமாட்டாது. நாம் பெரியவரா? சிறியவரா ?என்பதை நாம் செய்யும் செயல்கள் தான்  முடிவு செய்யும்.உருவம் அல்ல.   இதனை சொல்வதற்கு முன்னால் அதிவீரராம பாண்டியன்  அருமையான ஒரு காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி எது பெரியது என்பதை நீங்களே முடிவு செய்து விடுங்கள் என்று தேர்வை நம் கையிலே விட்டுவிடுகிறார். அந்தக் காட்சி என்ன என்று கேட்கிறீர்களா? இதோ உங்கள...

இன்னா செய்யாமை நன்று

இன்னா செய்யாமை முன்னுரை :   "  தீயவை தீய பயத்தலால் தீயவை     தீயினும் அஞ்சப் படும்" என்பார் வள்ளுவர். தீயைவிட அச்சம் தருவது தீமை. அச்சம் தரும் ஒரு செயலை செய்வது நம்மையும் அச்சத்தோடு வாழும் நிலைமைக்குத் தள்ளிவிடும்.தீயவை தீமை தருவதால் தீயவற்றிலிருந்து விலகியிருப்போம்.அதுதான் அறம். அதனைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். இன்னா என்றால் என்ன? "எவற்றையெல்லாம் பிறர்  உனக்குச் செய்யக்கூடாது என்று நீ நினைக்கிறாயோ எவை எல்லாம் உன்னை துன்பப்படுத்தும் என்று எண்ணுகிறாயோ அவை எல்லாம் இன்னாததாகவே கருதப்படும். உன்னைத் துன்பப்படுத்தும் செயல் அடுத்தவரையும் துன்பப்படுத்தும். உன்னைக் காயப்படுத்தும் சொற்கள் பிறரையும் காயப்படுத்தும். அவைதான் இன்னாதவை. இன்னா செய்யாமை என்பது  யாதொரு உயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல்  என்பதாகும். பொறாமையின் வெளிப்பாடு: இன்னா என்பது எதனுடைய வெளிப்பாடாக இருக்கும் என்ற ஆய்வு மேற்கொண்டால் பெரும்பாலும் அது பொறாமையின் வெளிப்பாடு என்பதன்றி வேறொன்றுமில்லை. " கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாற்றார் கோள் " என்பது வள்ளுவர் ...

ஓணான் பனைமரம் ஏறுமா?

ஓணான்  பனைமரம் ஏறுமா? ஏன் ஏறாது.....பனைமரம்  சொரசொரப்பானதாக இருக்கும் என்பதால்   பனைமரத்தில் ஓணான் ஏறாது என்கிறீர்களா? பனை மரத்தில் ஓணான் ஏறியதைப் நானும் பார்த்ததில்லை. ஆனால் பனை மரத்தில் ஓணான் ஏறும் என்பதை நான்  அடித்துச் சொல்லுவேன்.. ஓணான் பனைமரம் ஏறும்...ஏறும்...ஏறும். ஏழாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் ஒரு ஓணான் கணக்கு இருக்கிறது. அதில் ஓணான் பனை மரத்தில் ஏறிய கணக்கு ஒன்று இருந்தது. ஆதாரம் வேணாடுமா? பாடல் இதோ உங்களுக்காக.... " முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத் தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன் சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே நாணா தொருநாள் நகர்ந்து " என்று காரி நாயனார் கணக்கதிகாரம் என்ற நூலில் சொல்லியிருக்கிறார். இப்போவாவது  ஓணான் பனைமரம் ஏறும் என்பதை நம்புகிறீர்களல்லவா? இப்போது கணக்குக்கு வாருங்கள். ஒரு முழம் என்றால்  இரண்டு சாண். ஒரு சாண் என்றால் பன்னிரண்டு விரல் அளவு அப்படியானால் இரண்டு முழம் என்றால் இருபத்தினான்கு விரல் அளவு  என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பனைமரத்தினுடைய உயரம் 32  முழம். ஓணான் ஒரு நாளைக்கு ஒரு சாண் ஏறி ந...