கதம்பப் பருப்புத் துவையல்
கதம்பப் பருப்புத் துவையல் பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளிலேயே பெரிய பிரச்சினை என்ன என்றால் சமையல்தான். விடிந்ததும் இன்று என்ன என்ன குழம்பு வைப்பது? என்ன பொரியல் வைப்பது? என்று மண்டையே குழம்பிப் போய்விடும். குழம்பு வைத்தாலும் தொட்டுக் கொள்ள கூட்டு வைக்க வேண்டும். கூட்டுக்குக் காய்கறி வெட்ட வேண்டும். அதெற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? அதனால் புளியோதரையோ தக்காளிசாதமோ லெமன் சாதமோ தயிர்சாதமோ எதுவாக இருந்தாலும் எடுத்துக் கொண்டு வேலைக்குப் போகிற பெண்கள் ஓடுவர். பெரும்பாலான நாட்களில் ஊறுகாயை தான் தொட்டுக் கொள்வதற்கு வைத்திருப்போம். ஊறுகாய் கொண்டு செல்வதற்குப் பதிலாக பத்து வகையான துவையல் பொடி செய்து வைத்துக் கொண்டால் போதும். நாளும் வெவ்வேறு வகையான சுவையில் சாப்பிடலாம். வாருங்கள். முதலாவது கதம்பப் பருப்புப் பொடி எப்படிச் செய்வது என்று பார்ப்போம். கதம்பப் பருப்புப் பொடி செய்ய தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு = 2கையளவு துவரம்பருப்பு = 2 கையளவு கடலைப்பருப்பு = 1 கையளவு உளுத்தம் பருப்பு = 1 க...