கொரோனா ஓட்டம்...
கொரோனா ஓட்டம் சமீப நாட்களாக நம்மை தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையான சொல் எது ? என்று கேட்டால் கொரோனாவைத் தவிர வேறு எந்தப் பதிலும் இருக்க முடியாது. பத்திரிகையைத் திறந்தால் கொரோனா கட்டுரை... கொரோனா டேட்டா... கொரானா மருந்து... கொரோனா ஜோக்... இப்படி பக்கத்திற்குப் பக்கம் கொரோனா. தொலைக்காட்சி பெட்டியைப் பார்த்தால் கொரானாவுக்கு எதிரான விளம்பரம் ஒரு பக்கம். கொரோனா வியாபாரம் மறுப்பக்கம். கொரோனா விவாதங்கள் இன்னொரு பக்கம்... சரி இதெல்லாம் வேண்டாம் என்று கைபேசியை எடுத்தால் காது கிழியும்வரை கொரோனா பாதுகாப்பு விளம்பரம்.... ஐயோ...ஆளை விடுங்கடா சாமி என்று வெளியில் எட்டிப்பார்த்தால் அங்கங்கே கொரோனாவை நினைவூட்டுதல்போல முகமூடி மனிதர்கள்.... கொரோனா உண்டா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கும்போது நமக்கு அருமையானவர்கள், நன்கு பரிச்சயமானவர்கள் பாதிக்கப்படும்போது நம்பித்தான் ஆக வேண்டும் என்று மனம் அடம் பிடிக்கும். எது எப்படியோ ...எங்கும் கொரோனா... எதிலும் கொரோனா.... என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். எதைப் பற்றியும் ...