காமராசர்
காமராசர் காமராசர் அங்கம் கறுப்பு உள்ளம் பாலினும் வெளுப்பு இல்லை இவருக்கு படிப்பு அனைவருக்கும் தந்தார் படிப்பு " எண்ணும்எழுத்தும் கண்ணெனத் தகும்." என்றார் ஔவையார். கண்ணான கல்வியை இளமையில் காமராசரால் பெறமுடியவில்லை. அதனால்தான் தான் பெறாத கல்வியை மற்ற குழந்தைகளும் பெறாமல் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மதிய உணவு திட்டம் தந்தார். பசியில்லாமல் பாடம் படிக்க வழிவகை செய்தார். பல்லணை கட்டி பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் வாழ்வு வளமாக வழிவகை செய்தார். பெற்றோம் அவரால் வயிறார உணவு அவர்மேல் எமக்கு உண்டு பேரன்பு தந்தை குமாரசாமியும் தாயார் சிவகாமி அம்மாளும் பேர் விளங்க பிறந்த பிள்ளை . இவர் பிள்ளைப் பருவத்தில் தடம் பதித்து மகிழ பேறுபெற்ற ஊர் விருதுநகர். என்ன தவம் செய்ததோ விருதுநகர்! இந்தத் தலைமகனாம் நல்மகனை தமிழ் மண்ணுக்கு ஈந்த பெருமையை விருதுநகர் தனதாக்கிக் கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது. அவர் தமிழர் என்பதில் எமக்கு உண்டு பெருமையினும் பெருமை....