இஞ்சி தின்ன குரங்கு
இஞ்சி தின்ன குரங்கு இருட்டு வீட்டுல குருட்டு எருமை என்ன செய்யுது?" குரல் கொடுத்தபடியே அடுப்பங்கறைக்குள் வந்தாள் புவனா. "ஒண்ணுமில்யே....."உதட்டைப் பிதுக்கி கையை விரித்தாள் மாலதி " சம்மன் இல்லாமலே ஆஜர் ஆகுறமாதிரி இருக்கு. ஏதோ இருக்கு .... வாயைக் காட்டு....வாயைக்காட்டு...." விடாமல் கேள்வி கேட்டாள் தங்கை புவனா. "காவோலையில நாய் நடந்த மாதிரி ஏன் சடசடன்னு பேசிகிட்டு இருக்க ....என் வாயில ஒண்ணும் இல்லை. பாரு...பாரு...நல்ல பாத்துக்க தாயி......." "வாய்க்குள்ள ஏதோ இருக்கு அதுதான் வாயைத் திறக்க மாட்டேங்கிற... ஒண்ணுமில்லன்னா வாயை நல்லா திறக்க வேண்டியதுதானே," "இன்னா பாரு...ஆ...ஆ ... முதலை மாதிரி திறக்கட்டுமா.... நல்லா பார்த்துட்டியா?...பார்த்துட்டியா?" வாயைப் பிளந்தாள் மாலதி. " வாயை மூடு....சகிக்கல... நீ விழுங்கிட்ட....ஏதோ தப்பு செஞ்ச மாதிரிதான் தெரியுது....ம் கண்டு பிடிக்கிறேன்." "இவ பெரிய டிடக்டிவ் ...கண்டு பிடிச்சுருவா முசல் பிடிக்கிற நாயை மூஞ்சிலேயே தெரியாது " " முசல பிடிக்கிறேனா ...இல்லையா என்பது புடிச்ச...