Posts

Showing posts with the label பிசிராந்தையார் இளமைக்கால காரணம்

பிசிராந்தையாரின் இளமைக்கான காரணம்

Image
            பிசிராந்தையாரின் இளமைக்கான காரணம் வயது ஏறிவிட்டால்போதும் காதோரம்  நரைமுடி வந்து முதுமைக்குக்   கட்டியம் கூறி நிற்கும். கட்டியச் சத்தம் கேட்டதும் கட்டிலில்  கிடப்பவருக்கும் கூடவே ஒரு கவலை வந்து ஒட்டிக் கொள்ளும். முதுமையை மூடி மறக்க உள்ளம் முக்காடிடத் துடிக்கும். நரைமுடியை மாற்ற நாட்டு வைத்தியத்தை நோக்கி மனம் ஓடும். நரைமுடி யாருக்குமே விருப்பம் இல்லாத ஒன்று. எல்லோருக்குமே என்றுமே இளமையாக  இருக்கவே விருப்பம்.  இயற்கையாகவே சிலருக்கு சீக்கிரத்தில்  முடி நரைப்பதில்லை. இதற்கு ஆள் ஆளுக்கு ஒவ்வொரு  காரணம் கூறுவர். எல்லோரும் கூறும் காரணங்களுள் ஒன்று  "எனக்கு  கவலையே கிடையாது "என்பதுதான். ஆம். கவலை சீக்கிரமாக முடி நரைப்பதற்கான  முக்கிய  காரணமாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் கூறும் காரணமும் இதுதான். இங்கே ஒரு புலவருக்கு தலைமுடி  நரைக்கவில்லையாம்.  அதற்கு அவர்கூறும் காரணத்தைக் கேளுங்கள். அசந்து போவீர்கள்.  சங்க காலத்தில் பிசிராந்தையார் என்று  ஒரு புலவர்  இருந்தார்...