வல்வில் ஓரி பெயர்க்காரணம்
வல்வில் ஓரி பெயர்க்காரணம் கடையேழு வள்ளல்கள் யார் யார் என்றால் பாரி, காரி ,ஓரி ,பேகன் ,அதியமான், ஆய் ,நல்லி என்று வரிசையாக சொல்லி விடுவோம். இதில் பாரியைப்பற்றிக் கேட்டால் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்று சொல்லி விடுவோம். அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான் என்பது நாடறிந்த செய்தி. ஓரி யார் என்றால்....சற்று தடுமாறி நிற்போம். வல்வில் ஓரி என்று சொல்லுவோம். வல்வில் ஓரிதான் .ஏன் அவருக்கு அந்த பெயர் வந்தது.? அந்தப் பெயருக்கும் அவரை கடையேழு வள்ளல்களுள் ஒருவராக கொண்டாடுவதற்கும் காரணம் என்ன? இந்தக் கேள்விகளை முன் வைத்தால்... சற்று சிந்திக்க ஆரம்பிப்போம். கோயபல்ஸ் பொய் என்பதுபோல உண்மையையும் மறுபடியும் மறுபடியும் உரக்கச் சொல்ல வேண்டும். அப்போதுதான் உண்மை என்று நம்பப்படும். .அப்போதுதான் நம் மனதும் அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும். அல்லது ஒரு ஓரத்தில் தூக்கி வைத்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருக்கும். வாருங்கள். வல்வில் ஓரிக்கு இந்தப் பெயர் கிடைக்கத் தகுதி இருக்கிறதா? யாரிந்த வல்வில் ஓரி என்று பார்த்துவிடுவோம். எல்லா மன்னர்களுக்கும் இயல்பாக ஒர...