Posts

Showing posts from July, 2020

வெள்ளத்தனைய மலர் நீட்டம்...

Image
              வெள்ளத்தனைய மலர் நீட்டம்...     "    வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்       உள்ளத் தனையது உயர்வு."                                              குறள்  :  595 வெள்ளத்து  -நீரளவுக்கு அனைய - ஏற்ப    மலர் - நீர் தாவரங்களின் பூ  நீட்டம் _ நீட்சி மாந்தர்- மக்கள் தம் - தமது உள்ளத்து- மன ஊக்கத்துக்கு அனையது-ஏற்றாற் போலவே உயர்வு- உயர்ச்சி                             நீர்த் தாவரங்களில் மலரும்   மலர்களின் தண்டின் நீளமானது  தடாகத்தின் நீர்மட்டம் எவ்வளவு உயரம் இருக்குமோ அதற்கு ஏற்ப  உயரம் உடையதாக இருக்கும்.  அதுபோல ஒருவனுடைய மனதின்  ஊக்கம் எந்தஅளவு இருக்குமோ  அந்...

நகுதல் பொருட்டன்று நட்பு

Image
            நகுதல் பொருட்டன்று நட்டல்    " நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்    மேற்சென்று இடித்தற் பொருட்டு  "                                        குறள் : 784 நகுதல்  _ சிரித்து மகிழ்தல் பொருட்டன்று  _ என்பதற்காக   அல்ல நட்டல் _ நட்பு கொள்ளல் இடித்தல் _ கடிந்து சொல்லுதல் பொருட்டு _ என்பதற்காக விளக்கம் : நட்பு செய்தல் என்பது ஒருவரோடு ஒருவர் நகைத்து  மகிழ்வதற்காக  மட்டும் அன்று. வேண்டாத செயல்கள்  செய்யும்போது எடுத்துரைத்து அவரைத் திருத்துவதற்கும் உதவுவதாக இருத்தல் வேண்டும்.மிகுதியான தவறுகள்  செய்து துன்பத்தில் மாட்டிக்கொள்ள விடாமல் தடுப்பதாக   இருத்தல் மட்டுமே உண்மையான நட்பாக இருக்க முடியும்.  English Couplet : "  Nor for laughter only friendship all the pleasant day,   But for strokes of sharp reproving, when from           ...

உடம்படுமெய்

                          உடம்படுமெய் நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்துகளே  வருமானால்  அச்சொற்கள் புணருங்கால் அவ்விரு உயிர் எழுத்துகளும்  உடன்படாததுபோல தனித்து நிற்கும்.அவற்றை உடன்படச்  செய்வதற்காக அவற்றிற்கிடையே ஒரு மெய்யெழுத்து தோன்றும். அவ்வாறு தோன்றும் மெய்கள்  யகரமும் வகரமுமாகும். அதனையே உடம்படுமெய் என்கிறோம். வருமொழி முதலில் ஏதேனுமொரு  உயிரெழுத்து வர நிலைமொழியீற்றில் இ  ,  ஈ ,  ஐ. நின்றால்  யகரமும் இவை அல்லாத பிற உயிரெழுத்துகள்  நின்றால் வகரமும் ஏ நின்றால் யகரம்,வகரம் ஆகிய   இரண்டுமே சொல்லுக்கு ஏற்ப வரும் என்று வீர சோழியம் என்ற  இலக்கணநூல் கூறுகிறது. நன்னூலார் உயிர்முன் உயிர்  புணரும் புணர்ச்சியில் உடம்படுமெய்  வருவது பற்றி மூன்று விதிகளைக் கூறியுள்ளார்.    " இ  , ஈ  ஐ வழி யவ்வும்   ஏனை உயிர் வழி வவ்வும்   ஏ முன் இவ்விருமையும்   உயிர்வரின்   உடம்படுமெய் என்றாகும் " ...

ஆற்றுதல் என்பது....

                            ஆற்றுதல் என்பது....... "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்று சொல்லி உலகத்தையே தன்பக்கம்  திரும்பிப் பார்க்க வைத்தவர் கணியன் பூங்குன்றனார். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " என்று தானங்களில் முதல்தானம் அன்னதானம் என்று சொல்லித் தந்தவர் குடபுலவியார். "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்று சொல்லி நறுந்தொகை பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் அதிவீரராம பாண்டியன். "உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடியுறும்" என்று கோடிகளை நம் கைகளில் அள்ளித் தந்தவர் ஔவை. இன்னும் ஏராளம் சொல்லிக்  கொண்டே போகலாம்  இப்படி ஒவ்வொரு புலவரும் தம் பாடல்களில் எங்கோ ஓர் இடத்தில் தம் பெயரை முத்திரை பதித்து விட்டுச்  சென்றிருக்கின்றனர். அந்த வரிசையில்  நவமணிமாலை ஒன்று கோத்து தமிழை அழகு செய்த புலவர் நல்லந்துவனார். யார் இந்த நல்லந்துவனார்? நல்லந்துவனார் என்னும்  ஒரு சங்ககாலப் புலவர்  சேரர் வழி வந்தவர். இவர் பாடியதாக சங்க இலக்கியத்தில்  39 பாடல்கள் ...

ஆத்திசூடி - உயிர் வருக்கம்

                        ஔவையின் ஆத்தி சூடி                   ஆத்திசூடி படிக்காமல் தமிழ்  படித்தேன் என்று சொல்வதில் பொருளில்லை.  ஔவையைச் சொல்லாமல்  தமிழ்ப் புலவர் வரிசை  சொல்லப்படுவதில் ஞாயமும் இல்லை.   அ ன்னா,   ஆ வன்னா படிக்கத் தொடங்கிய காலத்தில் முதன்முதலாக நமக்கு அறிமுகமாகிய செய்யுள் என்றால் அது ஆத்திசூடியாகத்தான் இருக்கும். ஆரம்பப் பள்ளியிலிருந்தே  ஔவையின் கரம்பிடித்துத் தமிழ்நடை பயின்றவர்கள் நாம். மனப்பாடமாகப் படித்த முதல் செய்யுள் பெரும்பாலும் அறம் செய விரும்பு என்பதுவாகத்தான் இருக்கும்.    வகுப்பிற்குள் சென்றதும் அறம் செய விரும்பு ஆறுவது சினம்.... என்று வரிசையாகப் படிக்க ஆரம்பித்துவிடுவோம். கூடவே உலக நாதரின் உலகநீதியிலிருந்து ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டும். வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் என்று தொடர் மழையாக வகுப்பினுள் தமிழ் மழை பொழிந்திருப்போம்.  ...

ஔவையின்ஆத்திசூடி ( உயிர்மெய்)

                        ஔவையின் ஆத்திசூடி ( உயிர்மெய் வருக்கம் ) ஆத்திசூடியில் இரண்டாவது வருவது உயிர்மெய் வருக்கப் பாடல்கள். இதில் பதினெட்டு பாடல்கள் உள்ளன. அவற்றைக் காண்போம்.      1 . கண்டொன்று சொல்லேல்.      விளக்கம் :  கண்ணால் கண்டதற்கு மாறாக பொய்சாட்சி சொல்லாதே .             Translation :  Don't exaggerate what you saw.        2. ஙப்போல் வளை.         விளக்கம் :      ங என்னும் எழுத்தானது  எப்படி தன்னையும் பாதுகாத்து தன் வருக்க எழுத்துகளையும் சேர்த்து வைத்துக் கொள்ளுகிறதோ அதுபோன்று தன் சுற்றத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.            ங என்ற எழுத்து எப்படி பணிந்து வணங்குதல் போல காணப்படுகிறதோ அவ்வாறு பெரியோரைப் பணிந்து வணங்குதல் வேண்டும்.       ...

ஔவையின் ஆத்திசூடி ( ககர வருக்கம் )

                                ஔவையின் ஆத்திசூடி                                              (   ககர வருக்கம் )                    ஔவையார் எழுதிய ஆத்திசூடி எளிய பாடல் வரிகளைக் கொண்ட நீதி நூலாகும்.                               இதில் மொத்தம் 109 வரிகள் உள்ளன.                               பள்ளிப் பருவத்திலேயே படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளும் வகையில் எளிமையான நல்லொழுக்கக்  கருத்துகளைக் கொண்ட இப்பாடல்கள்                               உயிர் வருக்கம்.                 ...

ஔவையின் ஆத்திசூடி ( சகர வருக்கம் )

                      ஔவையின் ஆத்திசூடி                          (  சகர வருக்கம் ) ஆத்திசூடி  ஔவையாரால் எழுதப்பட்ட ஒரு நீதி நூலாகம்.                               இதில் மொத்தம் 109 ஒற்றை வரி  பாடல்கள்  உள்ளன. எளிய நல்லொழுக்கக் கருத்துகள் கொண்ட இந்த ஆத்திசூடி பாடல்கள் பள்ளி குழந்தைகள் எளிதாக மனப்பாடம் செய்யும் விதத்தில் இயற்றப்பட்டுள்ளது.                   உயிரெழுத்துகளைச் சொல்லிக்கொடுக்க பள்ளிகள் ஆத்திசூடி பாடல்களையே கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.                   ஆத்திசூடி எளிமை கருதி கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளபடி வகைப்படுத்தப் பட்டுள்ளன.                   உயிர் வருக்கம்                   உயிர்ம...

ஔவையின் ஆத்திசூடி ( தகர வருக்கம் )

                            ஔவையின் ஆத்தி சூடி                                ( தகர வருக்கம் ) 1.   " தக்கோன் எனத் திரி."               நற்பண்பு மிக்கவன் என்று சொல்லும்படியாக நடந்துகொள்.               Be trustworthy.           2. "  தானமது விரும்பு."             யாசகம் கேட்டு வருபவர்களுக்கு விருப்பத்தோடு கொடு.            . Be kind to the unfortunate .            3.  " திருமாலுக்கு அடிமை செய்."          படைத்த இறைவனுக்கு தொண்டு செய்து வாழ்வாயாக.           . Serve the protector.               4. "  தீவினை அகற்று ."      ...

ஔவையின் ஆத்திசூடி

                                           ஔவையின் ஆத்திசூடி                                 (  பகர வருக்கம் )     1   " பழிப்பன பகரேல்."   பொருள்    :  பிறர் மனம் புண்படும் படியான பழிச்சொற்களைப் பேசாதே.                   Do not use bulgur language.                 2". பாம்பொடு பழகேல்."         பொருள்     :     பாம்பிடமிருந்து எப்போதும் விலகியே இரு.                     Keep away from snakes.        ...

ஆத்திசூடி_ மகர வருக்கம்,வகர வருக்கம்

                          ஔவையின் ஆத்திசூடி             (      மகர வருக்கம் மற்றும் வகர வருக்கம் )                                       1. "மனம்தடு மாறேல் ."                     மனிதில் தடுமாற்றமின்றி  உறுதியாக   இரு.                                Don't vacillate.                         2. " மாற்றானுக்   கிடங்கொடேல்."                      பிறர் நம்மைத் தவறுதலாக பேச இடங்கொடுத்தல் கூடாது.                                Don't accomm...

பூவின் ஏழு பருவப் பெயர்கள்

Image
                        பூவின்  பெயர்கள்          பூவினை மலர் என்று சொல்வது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பூவானது அரும்பி ,மலராகி, மணம் பரப்பி மனங்களைக் கொள்ளை கொள்ளும்வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன. மாற்றங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மாற்றங்களுக்கு ஏற்ப பெயரையும் அல்லவா மாற்றிக் கொள்கிறது. பருவத்துக்கு ஒரு  பெயர் தாங்கி ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் பார் என்று உற்று நோக்க வைத்து உவகை கொள்ள வைக்கிறது. கண்களுக்கு விருந்து படைக்கும் மலருக்கு இத்தனை பெயர்களா? வியக்க வைக்கிறது அல்லவா?  எந்த மொழியிலும் இல்லாத  சொல்லாளுமை தமிழுக்கு உண்டு   என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே போதும். அரும்பு , நனை ,முகை   ,மொக்குள்  , முகிழ்   ,மொட்டு.  , போது, மலர் ,   வீ.   , பொதும்பர்   ,பொம்மல் ,செம்மல் . என மலர் தன் மாற்றங்களுக்கு ஏற்ப கொடுத்து வைத்திருக்கும் பெயர்கள்தான் எத்தனை !எத்தனை! அத...

பெண்ணின் ஏழு பருவப் பெயர்கள்

Image
                              பெண்ணின் ஏழு பருவங்கள்            இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு இன்பந் தரும்படி வாய்த்த நல் அமுது கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு தனிமை சுவையுள்ள சொல்லை- எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!                                                     _   பாரதிதாசன்.                                                ...