சரியான போட்டி
சரியான போட்டி இருபெரும் ஆளுமைகளுக்குள் எப்போதும் நீயா? நானா? என்ற போட்டி இருக்கும். படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம் இதற்குக் கிடையாது. படித்தவர்கள் தானே பண்பாக நடந்து கொள்வார்கள் என்று எல்லோரையும் நினைத்துவிட முடியாது. அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் நாம் ஏமாந்து தான் போவோம். பதவிக்காகப் போட்டி. புகழுக்காகப் போட்டி. முதல் மரியாதைக்கான போட்டி. உரிமைக்கான போட்டி. முதல் பரிசுக்கான போட்டி. எங்கும் போட்டி. எதிலும் போட்டி. இவை எல்லாம் எதற்காக? தான்தான் எல்லாம்.... நான் நானே.....நான் மட்டும்தான் என்று தன் இருப்பை முன்னிலைப்படுத்த உலகம் தன்னை மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற நான்...எனக்கு என்ற சுயநலம் அன்றி வேறென்ன சொல்வது? போட்டி பொறாமையாக மாறும்போது சில விபரீதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அப்படி எல்லா இடங்களிலும் விபரீதம் மட்டுமே நடைபெறும் என்று சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் அவர்களுக்குள் நடக்கும் போட்டி காண்பவர் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைவது உண்டு. கண்களுக்கு மட்டுமல்ல .உங்கள் செவிக்கும் இலக்கிய பசிக்கும் நல்ல விருந்தா...