அசை ( யாப்பிலக்கணம் )
அசை ( யாப்பிலக்கணம் ) ஒரு செய்யுளை யாத்தலுக்கு அதாவது கட்டி உருவாக்குதலுக்க எழுத்து,அசை, சீர் , அடி ,தொடை ,தளை போன்ற உறுப்புகள் தேவையாக உள்ளன. எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. எழுத்துக்களின் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட பகுப்பு அசை எனப்படும். ஓசை விட்டு விட்டு சேர்வதனால் அதனை அசை என்பர். அசைகள் சேர்ந்து சீர் உருவாகிறது. அசையானது நேரசை நிரையசை என இரண்டு வகைப்படும் என்பது யாப்பருங்கலக் காரிகை குறிப்பிடும் அசைகளாகும். ஆனால் தொல்காப்பியத்தில் நேரசை , நிரையசை , நேர்பு , நிரைபு என்று நான்கு அச...