இன்னா செய்தாரை ஒறுத்தல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் (குறளும் குயிலும்) கரையோடு மோதி விளையாடியது கடலலை. சிறுவர் சிறுவீடு கட்டி மகிழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கலைத்துப் போட்டு கலகலவென சிரித்தது அலை. கும்மிருட்டு நேரம். அலையோடு அலையாக கடற்கரைக்கு வந்தது ஒரு ஆமை . சுற்றும் முற்றும் பார்த்தது. கண்களுக்கு எட்டிய தூரம்வரை எதுவே தென்படவில்லை. மெதுவாக குழி தோண்ட ஆரம்பித்தது.போதுமான ஆழம் தோண்டியதும் முட்டைகளை இட்டு மூட ஆரம்பித்தது. பின்னர் அதற்கு மேல் நின்று நாட்டியம் ஆடுவதுபோல் ஆடி ...மணலை மேடு இல்லாமல் சமன் செய்தது. ஒன்றுக்கு மூன்றுமுறை பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விறுவிறுவென்று கடலுக்கு இறங்கி மறைந்து போனது. நாளுக்கு ஒருமு...