தன்னம்பிக்கை நாயகன் பாரதி
தன்னம்பிக்கை நாயகன் பாரதி பாரதி என்ற மூன்றெழுத்து நாமத்தை உச்சரிக்கும்போதே நம்முள் ஓர் உணர்ச்சி பொங்கும். உத்வேகம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும். வறுமையைக் கண்டு வாடிப்போனவன் அல்ல பாரதி. பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்ற மிதவாதிகளின் சொற்கள் ஒருபோதும் பாரதியின் காதுகளில் கேட்பதில்லை. பாரதி என்றாலே வேகம்...விவேகம்... நாட்டுப்பற்று ...மொழிப்பற்று...எவருக்கும் அஞ்சா துணிவு... அந்த முண்டாசுக்குள்ளும் முறுக்கிவிட்ட மீசைக்குள்ளும் ஒளிந்து கிடந்த துணிச்சலைக் கண்டு உள்ளம் வியக்கும். நம்பிக்கை நாயகன் பாரதி. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும் அச்ச...