மயங்கொலிகள்_ ண , ன , ந
மயங்கொலிகள் _ ண , ன , ந நாம் எழுதும்போது இதுவா... அதுவா... என்று மயங்க வைக்கும் எழுத்துகளை மயங்கொலிகள் என்கிறோம். அந்த விதத்தில் எப்போதுமே மயங்க வைக்கும் எழுத்துகளான ணகரம் னகரம் நகரம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மூன்று சுழி ணகரம் போட்டு எழுத வேண்டுமா அல்லது இரண்டு சுழி னகரம் போடவேண்டுமா அல்லது தந்நகரம் எனப்படும் நகரம் போட்டு எழுத வேண்டுமா என்ற ஐயம் ஏற்படுவதற்குக் காரணம் சரியான பொருள் அறியப்படாமை என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்து உச்சரிக்கும்போது எழுத்துகளை தவறாக உச்சரிக்கக் காரணம் எழுத்துகள் பிறக்கும் இடத்தைப் பற்றி நாம் அதிகபடியான அக்கறை எடுத்துக் கொள்ளாததே ஆகும். எழுத்து பிறக்கும் இடத்தையும் அதன் பொருளையும் சரியாக தெரிந்து கொள்வோமானால் பேசும்போதும் எழுதும்போதும் தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. 'ண ' என்பதை டண்ணகரம் என்று சொல்ல வேண்டும். காரணம் எங்கெல்லா...