இயற்றலும் ஈட்டலும் காத்தலும்....
இயற்றலும் ஈட்டலும் காத்தலும்.... "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு" குறள் : 385 இயற்றலும் _ உண்டாக்குதலும் ஈட்டலும் _ ஒரு வழித் தொகுத்தலும் காத்தாலும் _ காப்பாற்றுதலும் காத்த _ காப்பாற்றியவற்றை வகுத்தலும் _ வகை செய்தலும் வல்லது _ வல்லமை கொண்டது அரசு _ அரசாங்கம் பொருள் ஆக்கும் வழிகளை உருவாக்கி, ஈட்டியப் பொருளை மூலதனமாக தொகுத்து , காத்து அதனை மக்களுக்குப் பயன்படும் வழியில் செயல் திட்டங்கள் தீட்டி செயல்பட வல்லது அரசு. விளக்கம் : பொருள்செயல் வகையை ஆக்குதல், தொகுத்தல், காத்தல், அவற்றைப் பங்கீடு செய்தல் என்ற நான்கு பணிகள் கொண்டதாக ஓர் அரசு இருக்கும். இயற்றல் என்பதாவது பொருள் வருவதற்கான வழிகளை அறிகின்ற திறமை கொண்டதாக அரசு இருத்தல் வேண்டும். ஈட்டலாவது வரி , திறை, தீர்வை போன்றவற்றின் மூலம் முறையாக பொருளைத் தொகுத்து வைக்க ...