அறிவின்மை இன்மையுள் இன்மை....
அறிவின்மை இன்மையுள் இன்மை.... " அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு " குறள். :841 அறிவின்மை- அறிவு இல்லாமை இன்மையுள்-. இல்லாமைகளுள் இன்மை-இல்லாத தன்மை பிறிதின்மை-. பிற இல்லாமைகள் இன்மையா-இல்லாமையாக வையாது -கொள்ளாது உலகு-உலகத்து மக்கள் இன்மைகளுள் கொடிய இன்மை அறிவின்மையே ஆகும். வேறு இல்லாமைகளை எல்லாம் மக்கள் ஒரு இல்லாமையாகவே கருதமாட்டார். விளக்கம் : பொருள் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை. உறையுள் இல்லை. வீரம் இல்லை. துணிவு இல்லை. நட்பு இல்லை.புகழ் இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகளைக் கண்டிருப்போம். கேட்டிருப்போம். அது ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை. அவற்றையெல்லாம் அறிவிருந்தால் ஈட்டிக் கொள்ளலாம் ஆனால் ஒரே ஒரு இல்லை மட்டும் இல்லாமல் இருத்தல் கூடாது. அதுதான் அறிவின்மை. அறிவின்மை மட்டுமே இல்லாமையாக கருதப்படும். அறிவில்லாதிருந்தால் என்ன இருந்தாலும் அது இல்லாமலாகிவிடும். அறிவை ஆளத்தெரிய வேண்டும். அது இல்லை என்றால் வறுமை தான் வந்து...