யானை வெட்கப்படுமா?
யானை வெட்கப்படுமா? பெண்களுக்கு உரிய நான்கு நற்பண்புகள் என்னவென்று கேட்டால் அச்சம்,மடம், நாணம்,பயிர்ப்பு என்று சொல்லிவிடுவீர்கள் . அதனைக் கேட்டுக் கேட்டு பழகிவிட்டோம். அச்சம் என்றால் பயம். மடம் என்றால் அறியாமை. நாணம் என்றால் வெட்கம் பயிர்ப்பு என்றால் கூச்சம் என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அதனால் நன்கு தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த நான்கு பண்புகளும் பெண்களுக்கே உரியது என்று உயர்த்திப் பேசி வருகிறோம். கொண்டாடி மகிழ்கிறோம். இதில் நாணம் மட்டும் பெண்களுக்கே உரிய சிறப்புப் பண்பு என்று கூடுதலாகத் கொண்டாடுகிறோம். நாணம் பெண்களிடம் மட்டும்தான் காணப்படுமா? வேறு யாரும் நாணப்படவே மாட்டார்களா? ஆண்கள் வெட்கப்பட்டால்... நன்றாகவா இருக்கும் என்பீர்கள். மனிதர்களைத் தவிர வேறு யாரிடம் நாணம் இருக்கப்போகிறது? வேறு யாரிடமும் நாணம் இருக்காதா? இருக்கக் கூடாதா? என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஏன் இருக்கக் கூடாது? நான் பார்த்த ஒரு யானையிடம் நாணம் இருந்ததைப் பார்த்தேன் என்கிறார் ஒரு புலவர். யானையிடம் நாணத்தைப் பார்த்தாராமா? யாரப்பா அந்தப் புலவர்? அப்படி எந்த யானையிடம் ... எந்த இடத்தில் ...