கைபேசிக்குள் பள்ளி
கைபேசிக்குள் பள்ளி கைகள் கோத்து கதைகள் பேசி களித்த காலம் போச்சு! கற்ற பள்ளியைக் கண்டு வர கடவுச்சீட்டு வேண்ட லாச்சு! புத்தகப் பையும் சீருடையும் புதைந்து கிடக்க லாச்சு! புதைமிதியும் நடை மறந்து பழுதி யாகிப் போச்சு! கைபேசிக்குள் பள்ளி களை இழந்தது வகுப்பு ! ஆசிரியர் காட்டும் கோபம் எல்லாம் அடங்கி நாளும் ஆச்சு! அலங்கார நடையில் பாடம் நடத்தும் ஆசை ஓங்கி யாச்சு! செய்முறை பயற்சி எல்லாம் ...